கதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்! | Williams - Automotive Photography Portfolio - Motor Vikatan | மோட்டார் விகடன்

கதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்!

கலை: புகைப்படம் தமிழ், படங்கள்: வில்லியம்ஸ்

“இனிமே என்னை கான்டாக்ட் பண்ணணும்னா, ‘டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டாட்... பிச்சு டாட் காம்’க்கு வாங்க!’’ என்று வடிவேலு காமெடியாகச் சொல்வாரே... அதுபோல, விளையாட்டாகத்தான் தன்னுடன் படித்தவர்களிடம் சவால் விட்டார் வில்லியம்ஸ். இப்போது நிஜமாகவே www.williamsphotography.in என்ற இணையதளத்துக்குச் சென்றால், கண்களில் ஒற்றிக்கொள்ளும் அளவுக்கு அழகுப் புகைப்படங்கள். அனைத்தும் கார்/பைக் என்று ஆட்டோமொபைல் பிரியர்களை, கன்னாபின்னா லைக்ஸ் போட வைக்கும் ஸ்டில்கள். ஆடி, ஹூண்டாய், ஃபோர்டு, மாருதி, ஜாகுவார், மிட்சுபிஷி, பஜாஜ், ஹீரோ என்று கிட்டத்தட்ட அனைத்து முன்னணி கார்/பைக் நிறுவனங்களுக்கும் ஆஸ்தான போட்டோகிராபர்களில் வில்லியம்ஸும் ஒருவர். தான் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றில் மாஸ் + க்ளாஸ் ரக ஸ்டில்களுக்குப் பின்னால் உள்ள சீன்களை ஒன்லைனாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார், சென்னையைச் சேர்ந்த வில்லியம்ஸ் ஜோஸ்வா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick