ஆல்ரவுண்டர் டிகுவான்!

ஃபர்ஸ்ட் லுக் / ஃபோக்ஸ்வாகன் டிகுவான்தொகுப்பு : ர.ராஜா ராமமூர்த்தி

இந்தியாவின் எஸ்யுவி செக்மென்ட், ஃபோக்ஸ்வாகனுக்கு ஆகாத செக்மென்ட்டாகவே இருந்திருக்கிறது. 2017-ம் ஆண்டு மத்தியில், தன்னுடைய MQB பிளாட்ஃபார்மில் உருவான முதல் எஸ்யுவியான டிகுவான் காரை அறிமுகப்படுத்துகிறது ஃபோக்ஸ்வாகன். விலை 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்பதால், ஹூண்டாய் சான்டா ஃபீ, ஹோண்டா CR-V, வரவிருக்கும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் போன்ற கார்களுக்கு செம போட்டி இருக்கிறது!

டிஸைன்

காரின் தோற்றம் பாக்ஸ் போல இருக்கிறது. ஆனால், தொடர்ந்து காரின் டிஸைனை மனதுக்குள் அசைபோடும்போதுதான் சிறப்பம்சங்கள் வெளிப்படுகின்றன. LED ஹெட்லைட்ஸ் இதற்குச் சிறந்த உதாரணம். உற்றுநோக்கினால், எவ்வளவு நேர்த்தியான டிஸைன் என்பது புரியும். காரின் பின்பக்கம் ஜெட்டா, பஸாத் கார்களை நினைவூட்டினாலும், டெயில் லைட் பூமராங் ஸ்டைலில் உள்ளது.

உள்பக்கம்

தன்னுடைய வழக்கமான உள்பக்க டிஸைன் கொள்கையை டிகுவானில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துள்ளது ஃபோக்ஸ்வாகன். சென்டர் கன்ஸோல், டேஷ்போர்டு, ஸ்விட்ச் கியர் ஆகியவை மாடர்னாகவே இருக்கின்றன. கேபினில் உள்ள பாகங்கள் தரமாக உள்ளன. ஜெர்மனில் உள்ள காரில் டேஷ்போர்டு கறுப்பு வண்ணத்தில் இருந்தாலும், இந்தியாவில் டூயல் டோன் இன்டீரியர் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 3-ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், ஹர்மான் கார்டோன் ஆடியோ, ஹீட்டட் எலெக்ட்ரிக் முன்பக்க இருக்கைகள், இன்ஜின் ஸ்டாப்-ஸ்டார்ட், டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்ட் ஆட்டோ, மிரர் லிங்க், டிரைவ் மோடுகள், ஆல் வீல் டிரைவ் மாடலுக்கு ஆஃப் ரோடு மோடு செலெக்டர், 360 டிகிரி சரவுண்ட் கேமராக்கள் என்று வசதிகளுக்கு டிகுவானில் குறைவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick