ஆட்டோ எக்ஸ்போ 2016 - பைக்ஸ்

தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஹோண்டா மோட்டார் சைக்கிள் - ஸ்கூட்டர் இந்தியா

 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ துவங்க சில வாரங்களே இருந்த நிலையில், திடீரென ‘நவி’ எனும் புதிய வாகனத்தின் டீஸரை வெளியிட்டது ஹோண்டா. அதற்கு முன்பு நவி பற்றிய தகவலோ, ஸ்பை படங்களோ வெளியாகாததால், பலத்த எதிர்பார்ப்பு உருவானது. இறுதியாக, எக்ஸ்போவில் நவி அறிமுகமானபோது, ஆவலுடன் காத்திருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

 ‘பைக் பாதி; ஸ்கூட்டர் மீதி’ எனக் கலவையாக இருக்கும் இதன் டிஸைன், முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டது. சீட், ஹேண்டில்பார், சேஸி, முன்பக்க ஃபோர்க் ஆகியவை பைக்கில் இருப்பதுபோலவும், சின்ன வீல்கள் மற்றும் பின்பக்க வீலுக்கு அருகே இன்ஜின் ஆகியவை ஸ்கூட்டரையும் நினைவுபடுத்துகின்றன. நவியில் மற்ற ஹோண்டா ஸ்கூட்டர்களில் இருக்கும் அதே 7.8bhp பவரை வெளிப்படுத்தும் 109.2சிசி இன்ஜின் இடம்பிடித்துள்ளது. இரு வீல்களிலும் டிரம் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தனித்துத் தெரிய விரும்பும் இளைஞர்களைக் குறிவைத்து நவியைக் களமிறக்கி இருப்பதால், பல்வேறு CUSTOMISATION ஆப்ஷன்களையும் இதனுடன் வழங்குகிறது ஹோண்டா. டெல்லி எக்ஸ் ஷோரும் விலையான 39,500 ரூபாய்க்கு வெளிவந்திருக்கும் நவி, தனது வழக்கமான ஸ்டைலில் இருந்து விலகியிருந்தாலும், வித்தியாசத்தைப் புகுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick