இது ஆஃப்ரோடு பைக் இல்லை! | Kawasaki Versys 650 - First Ride - Motor Vikatan | மோட்டார் விகடன்

இது ஆஃப்ரோடு பைக் இல்லை!

ஃபர்ஸ்ட் ரைடு : கவாஸாகி வெர்சிஸ் 650 தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

 இந்தியாவில் விற்பனையாகும் பைக்குகளில், விலைக்கேற்ற மதிப்பை அளிக்கும் பைக்குகளில் ஒன்று, நின்ஜா 650. அதன் சகோதரன்தான் வெர்சிஸ் 650. ‘கொஞ்சம் அதிக விலைக்கு, நல்ல பைக்’ என்கிறது கவாஸாகி.

அட்வென்ச்சர் - டூரிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக் என டூயல் பர்ப்பஸ் பைக்காக இருக்கும் வெர்சிஸ் 650-ன் இருக்கை உயரம், 840 மிமீ. எடையோ 216 கிலோ. ஆனால், சிட்டி டிராஃபிக்கில் இந்த அளவுகள் பிரச்னையாக இல்லை. நின்ஜா 650 பைக்கைவிட கொஞ்சம் பவர் குறைந்திருந்தாலும், பைக்கின் டார்க் ரேட்டிங்கில் மாற்றம் இல்லை. திராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக உள்ளது.

ட்வின் - ஹெட்லைட்ஸ் செமி பேரிங், சாலையில் இருப்பவர்களை நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கிறது. நெடுஞ்சாலையில் பைக் அமைதியாகச் சென்றாலும், ஹெல்மெட்டில் காற்று மோதும் சத்தம், மிக அதிகமாகக் கேட்கிறது. விண்ட் ஸ்க்ரீனை அட்ஜஸ்ட் செய்தபிறகு, சத்தம் கொஞ்சம் குறைகிறது. 5,500 ஆர்பிஎம்-ல் 110 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்ய முடிவது சூப்பர். 21 லிட்டர் ஃப்யூல் டேங்க் தாராளம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick