கேன்ட்டோவா? க்ரெஸ்ட்டோவா?

SPY PHOTO - ரகசிய கேமரா- மஹிந்திரா குவான்ட்டோ

காம்பேக்ட் எஸ்யுவி செக்மென்ட்டின் முன்னோடி, மஹிந்திரா குவான்ட்டோ. இதன் சுமாரான விற்பனை காரணமாக, TUV3OO காரின் அண்ணனாக விளங்கும் குவான்ட்டோவின் தோற்றத்தில் கணிசமான மாற்றங்களைச் செய்து, கேன்ட்டோ(Canto) அல்லது க்ரெஸ்டோ (Cresto) என்ற புதிய பெயரில், இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தவிருக்கிறது மஹிந்திரா. தவிர,  ‘TUV3OO காரில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி, இந்த மேம்படுத்தப்பட்ட காரில் பயன்படுத்தப்படலாம்’ என, மோ.வி டிசம்பர் 2015 இதழில் கூறியது தற்போது உறுதியாகியிருக்கிறது. டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த காரை, மெரினா கடற்கரை அருகே படம் பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த வாசகர் மனோஜ் பிரபாகரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick