ஆட்டோ எக்ஸ்போ 2016

கார்ஸ் - ஆட்டோ எக்ஸ்போ 360 டிகிரி கவரேஜ்!

சியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் திருவிழா, டெல்லி ஆட்டோ எக்ஸ்போ. 13-வது நிகழ்வான இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, அதிக அளவில் கார், பைக், ட்ரக் தயாரிப்பாளர்கள் கடை விரித்திருந்தார்கள். எதிர்பார்த்ததுபோலவே காம்பேக்ட் செடான் மற்றும் காம்பேக்ட் எஸ்யுவிகளின் படையெடுப்பு அதிகமாக இருந்தது. ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் வேட்டைக்காடாக இருந்த இந்த எக்ஸ்போவின் ரிங் சைட் வியூ இது...

 பிஎம்டபிள்யூ

எக்ஸ்போவில் மிக முக்கியமான இரண்டு கார்களை விற்பனைக்குக் கொண்டுவந்தது பிஎம்டபிள்யூ. புதிய தலைமுறை X1 எஸ்யுவி, 29.9 லட்சம் ரூபாய் முதல் 39.9 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை விலையுடன் அறிமுகமானது. தற்போது டீசல் இன்ஜின் மாடல் மட்டுமே! இந்த 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் 189bhp சக்தியை அளிக்கிறது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. பென்ஸ் GLA, ஆடி Q3 ஆகிய போட்டி கார்களால் தடுமாறிய X1 காரின் விற்பனை, இனி சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick