நெடுஞ்சாலை வாழ்க்கை - 34

நாற்பதாயிரமும் செல்போனும் பரிசு! சேலம் to காஷ்மீர் கா.பாலமுருகன் படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ஹாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூர் அருகே உள்ள தீம்பூர்னியில் இருந்து, அஹமதுநகர் நோக்கிச் செல்லும் முகல் பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தோம். கர்மிலா, ஜல்கான், மிராஜ்கான் என சில ஊர்களைக் கடந்தால், நகர் எனச் சொல்லப்படும் அஹமதுநகர் 145 கி.மீ தூரம். இந்த வழியில் மேலே குறிப்பிட்ட ஊர்களைத் தவிர, வேறு கிராமங்கள் இல்லை. அதாவது, அடித்துப் போட்டால்கூட கேட்க ஆளில்லாத சாலை. இந்தச் சாலையில் தமிழக லாரிகள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பயணிப்பது இல்லை. தவிர்க்க முடியாமல் செல்ல வேண்டியதிருந்தால், மொத்தமாகச் சேர்ந்து பயணிப்பதை வாடிக்கையாகக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு டிரைவருக்கும் ஓர் அனுபவமாவது இருக்கிறது. எனவே, பதற்றத்தைத் தணிக்க பரமேஸ்வரனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்தேன். தீம்பூர்னியில் மாலை 6 மணிக்கு வந்துவிட்டதால், உடன் வந்த லாரிகளுடன் சேர்ந்து அஹமதுநகர் எல்லையில் இருக்கும் தாபா வரை சென்றுவிட்டேன். மற்ற லாரிகள் காலையில் செல்லலாம் எனக் கூறியதால், நான் மட்டும் டீ குடித்துவிட்டு மீண்டும் லாரியை எடுத்தபோது இரவு 1 மணி இருக்கும்.

ராணுவக் குடியிருப்பு தாண்டி டோல்கேட்டுக்குப் பணம் செலுத்திவிட்டு, அஹமதுநகர் நெடுஞ்சாலையில் திரும்பினேன். சிறிது தூரம்தான் சென்றிருப்பேன். அந்த இரவில் இரண்டு ஆட்டோக்கள் மிக வேகமாக லாரியை சைடு வாங்கி முன்னே சென்று, லாரியின் முன்னால் நின்றன. என்ன பிரச்னை எனப் புரியாமல், வழிவிடுமாறு ஹாரன் அடித்தேன். சாலையில் வேறு வாகனங்கள் இல்லை. இரு ஆட்டோவிலும் இருந்து ஆட்கள் இறங்கி நேராக லாரியை நோக்கிவந்தார்கள். என்னவென்று புரியாமல் சற்று விழித்தேன். லாரியின் பக்கவாட்டில் வந்தவன், ஒரு வசவை உதிர்த்துவிட்டு, ‘ஏன் ஆட்டோவை இடித்துவிட்டு நிற்காமல் வந்தாய்?’ எனக் கேட்டதும், எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘சாலையே காலியாகக் கிடக்கிறது; நான் எதற்கு உன் ஆட்டோவை இடிக்க வேண்டும்’ என்று கேட்கவும், லாரியில் ஏறிய ஒருவன் என் சட்டையைப் பிடித்தான். ‘ஆட்டோவை இடித்து நொறுக்கிவிட்டு, நான் இடிக்கவில்லை என்கிறாயா... மரியாதையாக இடித்ததை சரி செய்வதற்குப் பணத்தைக் கொடுத்துவிடு. இல்லாவிட்டால் லாரியைத் தீ வைத்துவிடுவேன்’ என மிரட்டினான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick