எந்திரன் - 15 | Enthiran - Multi Point Fuel Injection - Motor Vikatan | மோட்டார் விகடன்

எந்திரன் - 15

எப்படி எரிகிறது எரிபொருள்?அதிக மைலேஜ் எதனால் கிடைக்கிறது? Multi Point Fuel Injectionபரணி ராஜன்

பெட்ரோல், டீசல் - எரிபொருள் எதுவாக இருந்தாலும், அவற்றின் அடிப்படை எரிதல் ஒன்றுதான். எல்லா எரிபொருளும் ஹைட்ரோ கார்பன்களால் ஆனவை. காற்றுடன் கலந்து எரியும்போது, அதிலுள்ள ஆக்ஸிஜன், எரிபொருளின் எரிதலைத் தூண்டுகிறது. முடிவில் CO2, CO, H2O (நீராவி) மற்றும் சில வேதிப்பொருள்கள் (நைட்ரஜன் இன்ன பிற மாசுக்கள்) வெளிவருகின்றன. இவையே எக்ஸ்ஹாஸ்ட் வாயுக்கள் (Exhaust Gases) ஆகி வளிமண்டலத்தில் கலக்கின்றன.

பெட்ரோல் இன்ஜின்கொண்ட பழைய வாகனங்களில் கார்புரேட்டர் எனும் அமைப்பு, இந்த பெட்ரோல் + காற்று கலவையைத் தயாரித்து, இன்ஜினுக்கு அனுப்பும். 14.7 பங்கு காற்றுக்கு, ஒரு பங்கு பெட்ரோலும் கலந்த கலவைதான் எரிபொருள் சமவிகிதக் கலவை (Stoichiometric Ratio). இந்த விகிதத்தில் எரிந்தால், நமக்குத் தேவையான ஆற்றல், அளவான எரிபொருள் செலவில் கிடைக்கும். இதில், காற்றின் பங்கு அதிகமானால் அது ‘லீன் மிக்சர்’ (Lean Mixture). காற்றின் பங்கு குறைந்தால், ‘ரிச் மிக்சர்’ (Rich Mixture).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick