எல்லாம் ஓகே... விலைதான் கொஞ்சம் அதிகம்!

ரீடர்ஸ் ரெவ்யூ பஜாஜ் பல்ஸர் As150 ஞா.சுதாகர் , படங்கள்: தி.விஜய்

த்தனையோ பைக்ஸ் இருந்தாலும் பஜாஜ் பல்ஸர் என்றால், எனக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு முன்பு டிவிஎஸ் சென்ட்ரா வைத்திருந்தேன். அது வாங்கி பல ஆண்டுகளாகிவிட்டதால், எனது நீண்ட நாள் ஆசையான பல்ஸரைத்தான் வாங்க வேண்டும் என முடிவு செய்தேன்.

ஏன் பல்ஸர் AS 150?

முதலில், பல்ஸர் 150 DTSi மாடலைத்தான் வாங்க நினைத்தேன். அதிலும் ப்யூர் பிளாக் கலர், என் ஃபேவரிட். அதை புக் செய்வதற்காகத்தான் ஷோரூம் சென்றிருந்தேன். ஆனால், ப்யூர் பிளாக் கலர் பல்ஸர் அப்போது கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக,  வெள்ளை நிறக் கோடுகள் கொண்ட பைக்தான் இருந்தது. என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் கோவை 100 அடி சாலையில் இருக்கும் ஜெய்கிருஷ்ணா பஜாஜ் ஷோரூமில் AS150 பைக்கைப் பார்த்தேன். பார்த்தவுடன் இதன் ஃப்ரெஷ் டிஸைன் கவர்ந்துவிட்டது. நீல நிற பைக் மிக அழகாக இருந்தது. பைக்கின் விவரங்களை எல்லாம் கேட்ட பிறகு, இதுதான் சரியாக இருக்கும் எனத் தோன்றியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick