சீல் வாங்க மறக்காதீங்க டாக்ஸி டிரைவர்களே! | Information about vehicle permit - Motor Vikatan | மோட்டார் விகடன்

சீல் வாங்க மறக்காதீங்க டாக்ஸி டிரைவர்களே!

வாசகர் அனுபவம் தமிழ் ஓவியம்: கண்ணா

சொந்த கார் என்றால் பிரச்னை இல்லை. இந்தியா முழுக்கச் சுற்றினாலும், ‘பெர்மிட் எங்கே? ஆர்சி எங்கே?’ என்று கேட்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். இதுவே வாடகை கார்களில் மாநிலம் விட்டு மாநிலம் போகும்போது, டிரைவர்கள் என்னென்ன வெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்; பெர்மிட்டுக்கு என்ன வழிமுறைகள்? இதற்குப் பாடமாய் அமைந்திருக்கிறார் டிரைவர் சண்முகநாதன்.

‘‘திருப்பதி போனா திருப்பம் வரும்னு சொல்வாங்க... எனக்கும் திருப்பம் வந்துச்சு.ஆனா, கொஞ்சம் நஷ்டமான திருப்பம்!’’ என்று நொந்தபடி சொன்னார் டிரைவர் சண்முகநாதன். தூத்துக்குடி ஃபாஸ்ட் டிராக் அலுவலகத்தில், தனது மஹிந்திரா ஸைலோவை அட்டாச்மென்ட்டுக்கு விட்டு வாடகைக்கு கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார் சண்முகநாதன். ஓனரும் இவரே; டிரைவரும் இவரே! தூத்துக்குடியில் இருந்து திருப்பதிக்கு தனது வாடிக்கையாளர்களை அழைத்துச் சென்றபோது, பெர்மிட் எல்லாம் பக்காவாக எடுத்தவர், ஆந்திரா செக்போஸ்ட்டில் பெர்மிட்டில் சீல் வாங்க மறந்திருக்கிறார். இதனால், ஆந்திர மாநில அதிகாரிகளிடம் ஏற்பட்ட மோசமான அனுபவம் + நேர, பண விரயத்தைச் சொன்னார் சண்முகநாதன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick