நோவாமல் பயணிக்க இனோவா! | Readers great escape in Innova - Nanjil Sampath - Motor Vikatan | மோட்டார் விகடன்

நோவாமல் பயணிக்க இனோவா!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: டொயோட்டா இனோவாநாகர்கோவில் to பெருந்தேனருவி தமிழ் , படங்கள்: ரா.ராம்குமார்

‘‘அப்படியென்றால் எனக்கு இரண்டு நாள் ஓட்டுநர் பணிக்கு வருகிறதா மோட்டார் விகடன்?’’ - மோ.வி-யின் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் பகுதியைப் பற்றிச் சொன்னதும் இப்படித்தான் கடகடவெனச் சிரித்தார் நாஞ்சில் சம்பத் - முன்னாள் அ.தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர். ‘‘எனக்கு கார் ஓட்டத் தெரியாது. ஆனால், இனோவாவைப் பற்றி நன்றாகத் தெரியும். குடும்பத்துடனோ, கழகப் பணிகளுக்கோ நோவாமல் பயணிக்க இனோவாவைத் தவிர, வேறு காரொன்றை நான் கண்டது இல்லை!’’ என்று குழந்தைக் குதூகலத்துடன் பயணத்துக்குக் கிளம்பினார் நாஞ்சில்.

டொயோட்டாவின் இனோவா, எப்போதுமே லைம்லைட்டில் இருப்பதற்குக் காரணம் - எளிமையான கையாளுமை, பில்டு குவாலிட்டி, டர்போ லேக் இல்லாத இன்ஜின் மட்டுமல்ல; நாஞ்சில் சம்பத்தும்தான். ம.தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்குத் தாவிய நாஞ்சிலுக்கு அன்புப் பரிசாக ஜெயலலிதாவிடம் இருந்து இனோவா வழங்கப்பட்டதில், இன்னும் மீம்களில் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ஆனது இனோவா. நாஞ்சில் சம்பத்தும், ‘இனோவா சம்பத்’ என்று அறியப்படுவதில் மகிழ்ச்சியே அடைகிறார். டாக்ஸி செக்மென்ட், ஓன் போர்டு என்று இரண்டிலும் கலக்கி வந்த இனோவா, நாஞ்சில் சம்பத் மூலம் அரசியல் வட்டாரத்திலும் பிரபலம் ஆனது.

நாகர்கோவில், மணக்காவிளையில் அவர் வீட்டு வாசலில் இறங்கியபோது, கட்சிக் கொடியுடன் நம்மை வரவேற்றது இனோவா. ‘‘நீங்கள் நினைப்பதுபோல் இது புரட்சித் தலைவி அம்மா தந்த அன்புப் பரிசு அல்ல; ம.தி.மு.க.வில் நான் இருந்தபோது, வைகோவின் பேருதவியால் இந்த இனோவாவை 2012-ல் வாங்கினேன். கழகப் பணிகளுக்கு அம்மா தந்த இனோவா; குடும்ப நிகழ்வுகளுக்கு எனது சொந்த இனோவா!’’ என்று கை நிறைய புத்தகங்களும் பத்திரிகைகளுமாக பின் சீட்டில் அமர்ந்தார் நாஞ்சில் சம்பத். ‘‘புத்தகங்கள்தான் என்னைக் காயப்படுத்தாத, எனது மௌன நண்பர்கள்!’’ என்றார் சம்பத்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick