பார்க்கிங் ஈஸி! டிரைவிங் ஈஸி! | Renault KWID - Readers review - Motor Vikatan | மோட்டார் விகடன்

பார்க்கிங் ஈஸி! டிரைவிங் ஈஸி!

ரீடர்ஸ் ரெவ்யூ : ரெனோ க்விட் சந்திப்பு, படங்கள்: ஜெ.விக்னேஷ்

1980-களில், என் அம்மாவுக்காக 30,000 ரூபாய்க்கு ஃபியட் கார் வாங்கினேன். அதுதான் என்னுடைய முதல் கார். அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரை நான் வசிக்கும் சௌகார்பேட்டை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி. காரை பார்க்கிங் செய்வதுதான் இங்கே மிகப் பெரிய பிரச்னை. அதனால், சில ஆண்டுகளில் அந்த காரை விற்று விட்டேன். பின்பு 1990-களின் இறுதியில், பழைய மாருதி 800 வாங்கி ஓட்டிக்கொண்டிருந்தேன். ஆனால், மீண்டும் அதே பார்க்கிங் பிரச்னை தலைதூக்க... அந்த காரையும் விற்றுவிட்டேன்.

அதன் பிறகு, அலுவலகத்துக்குப் போய் வருவதற்கு மிகச் சிரமமாக இருந்ததால், கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டர் வாங்கி ஓட்டிக்கொண்டிருந்தேன். அதில் மகாபலிபுரம் வரைகூட சென்றுவந்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு சின்ன விபத்தைச் சந்திக்க நேர்ந்தது. அதனால், ஸ்கூட்டர் ஓட்டுவதை விட்டுவிட்டேன். அலுவலகத்துக்குச் சென்றுவர சின்ன கார் ஒன்றை வாங்கலாம் என நினைத்தேன்.

ஏன் ரெனோ க்விட்?

கார் வாங்க முடிவு செய்தவுடன், இணைய தளங்களில் லேட்டஸ்ட் மாடல் கார்களைப் பற்றித் தேடித் தெரிந்துகொண்டேன். அவற்றில், ‘எது சிறந்த கார்?’ என ஆராய்ச்சியில் இறங்கியபோது, 3-4 லட்சம் ரூபாய் விலையில் உள்ள மற்ற கார்களைவிட, ரெனோ க்விட் அனைத்திலும் சிறப்பாக இருந்தது. மோட்டார் விகடன் இதழிலும் இந்த காரைப் பற்றிய கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதைப் படித்த பின்பு, க்விட் கார் வாங்கலாம் எனத் தீர்மானித்தேன். மேலும், என்னுடைய நண்பர்கள் சிலர் ரெனோ டஸ்ட்டர் வைத்துள்ளதால், அவர்களும் ரெனோ நிறுவன காரை நம்பி வாங்கலாம் என நம்பிக்கை அளித்தனர். அதனால், கடந்த அக்டோபரில் சென்னை அண்ணா சாலையில் உள்ள ரெனோ ஷோரூமுக்குச் சென்றேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick