இன்ஜினுக்கு லைக் போடலாம்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: எம்வி அகுஸ்டா புரூட்டேல் 1090 தொகுப்பு / ராஜா ராமமூர்த்தி

லகிலேயே கவர்ச்சியான பைக்குகளைத் தயாரிப்பதில், இத்தாலியின் எம்வி அகுஸ்டா நிறுவனம் கில்லாடி. அகுஸ்டாவின் மிகப் பிரபலமான ஃபுல் ஃபேரிங் F4 பைக், இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனாலும், கைனடிக் குரூப்புடன் இருக்கும் ஒப்பந்தத்தின் விளைவாக, Brutale 1090 பைக் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

டிஸைன்

நேக்கட் பைக்குகள்தான் இப்போது டிரெண்ட். ஏறக்குறைய எல்லா பைக் நிறுவனங்களுமே தன் கையிருப்பில் ஒரு நேக்கட் பைக்காவது வைத்திருக்கின்றன. ஆனால், உலகளவில் விற்பனைக்கு வந்து ஏழு ஆண்டுகளான பைக், இந்தியச் சாலைகளில் எப்படி இருக்கும்? ஏழு ஆண்டுகளில் டிஸைன் மட்டும் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டது.

ஆனாலும், பைக்கின் நுணுக்கமான டிஸைன் அம்சங்களை, நாம் டெஸ்ட் செய்த பைக்கின் கறுப்பு வண்ணம் மறைத்துவிட்டது. பளீரென்ற வண்ணத்துடன் இருந்திருந்தால், இன்னும் தூக்கலாக இருந்திருக்கும். முன்பக்கம் இருக்கும் ஓவல் ஹெட்லாம்ப் அழகாக இருந்தாலும், ஷார்ப்பான டிஸைனுடன் இல்லை. பைக் டேங்க்கில் இருக்கும் ஷார்ப்பான கோடுகளும், உயரமாக அமைக்கப்பட்டிருக்கும் டெயில் பகுதியும் அவ்வளவு ‘கூல்’ இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick