கமான்... க்ரிஸ்டா!

ஃபர்ஸ்ட் டிரைவ் : டொயோட்டா இனோவா க்ரிஸ்டா MT/ATதொகுப்பு / ராகுல் சிவகுரு

க்ரிஸ்டா என்ற பெயரில் இந்த மாதம் களமிறங்கும் இரண்டாம் தலைமுறை இனோவாவின் விலை, எம்பிவி செக்மென்ட்டில் தனது 15 ஆண்டுகால ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையிலேயே இருக்கும். அதாவது, பழைய காரைவிட குறைந்தபட்சம் மூன்று லட்சமாவது அதிகமாக இருக்கும். முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் தயாராகியிருக்கும் இனோவா க்ரிஸ்டா, கூடுதல் விலையை நியாயப்படுத்தும் வகையில் இருக்கிறதா?

டிஸைன்

அகலமான கிரில், V வடிவ பானெட், ஷார்ப்பான ஹெட் லைட்ஸ் ஆகியவற்றால், காரின் முகப்புப் பகுதி ஸ்டைலானதாக மாறியிருக்கிறது. ஷோல்டர் லைன், D-பில்லர் கண்ணாடி, உப்பலான பின்பக்க வீல் ஆர்ச் போன்றவை, காரின் பக்கவாட்டுத் தோற்றத்துக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. பின்பக்கம், ஸ்மார்ட்டான டெயில் லைட்ஸ் இடம் பிடித்திருக்கின்றன. பழைய இனோவா மற்றும் இனோவா க்ரிஸ்டாவின் வீல்பேஸ் ஒன்றுதான் என்றாலும், நீளம் மற்றும் அகலத்தில் க்ரிஸ்டா வளர்ந்திருப்பதன் விளைவாக, இடவசதி கூடியிருப்பதாக டொயோட்டா கூறுகிறது. திடமான கட்டுமானத்துக்காக, பழைய இனோவாவைப் போலவே க்ரிஸ்டாவும் லேடர் ஃப்ரேம் சேஸியைக் கொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick