பில்டிங்கும் ஸ்ட்ராங்; பெர்ஃபாமென்ஸும் ஸ்ட்ராங்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.4G ATதொகுப்பு / ர.ராஜா ராமமூர்த்தி

ந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனைக்கு வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர். ஏற்கெனவே அதன் செக்மென்ட்டில்  ராஜாவாக இருக்கும் ஃபார்ச்சூனரை, புதிய மாடல் சக்கரவர்த்தியாக மாற்றுமா?

டிஸைன் & இன்ஜினீயரிங்

பழைய ஃபார்ச்சூனர் பார்க்க மாஸாக இருந்தாலும், ஷார்ப்பாக இருக்காது. ஆனால், புதிய மாடலின் டிஸைன் ரொம்பவே ஸ்போர்ட்டி. ஒரு கோணத்தில் லெக்ஸஸ் மாடல் கார்போலத் தோற்றமளிக்கிறது. காரின் பம்பர் மிகவும் உயரமாக, கிரில் சற்றுப் பின்னோக்கி இழுத்து வடிவமைக்கப்பட்டுள்ளதால், பழைய ஃபார்ச்சூனரைவிட முன்பக்கம் ரொம்பவே மாடர்ன். ஷார்ப்பாக இருக்கும் ஹெட்லைட்டுகளும், LED டே-டைம் ரன்னிங் லைட்டுகளும் நல்ல கான்ட்ராஸ்ட்டைத் தருகின்றன. ‘V’ வடிவில் ரொம்பவே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் க்ரோம், காருக்கு மிகவும் மிரட்டலான தோற்றத்தைத் தருகிறது.

முன்பக்கத்தைவிட பின்பக்கத்தை பக்கவாட்டில் இருந்து பார்த்தால், இன்னும் ஸ்டைலிஷாகத் தெரிகிறது. C பில்லர் அருகே சற்று உயரும் பெல்ட்-லைன், செம டிஸைன் டச். டொயோட்டாவின் மிக அழகான எஸ்யுவிகளில் ஒன்று புதிய ஃபார்ச்சூனர். இதன் லேடர்-ஃப்ரேம் சேஸி, மிகவும் ஸ்ட்ராங்கான பிக்-அப் டிரக் என புகழ்பெற்ற டொயோட்டாவின் HiLux டிரக்கின் சேஸியோடு தொடர்புடையது. காரின் சேஸி முன்பைவிட பல மடங்கு உறுதியாக இருக்கிறது. 

உள்பக்கம்

முன்பைவிட நீளமாக, அகலமாக, தாழ்வாக இருக்கிறது புதிய ஃபார்ச்சூனர். அதிக அகலத்தை காருக்குள் அமர்ந்ததுமே உணர முடிகிறது. முன்பக்க இருக்கைகள் சொகுசாக இருக்கின்றன. தொடைகளுக்கும், முதுகுக்கும் நல்ல சப்போர்ட்டை அளிக்கின்றன. போல்ட்ஸ்ட்ரிங் சிறப்பாக இருப்பதால், பக்கவாட்டில் குலுங்காமல் பயணிக்கலாம்.

புதிய ஃபார்ச்சூனரின் பின்னிருக்கையில் இப்போது மூன்று பேர் தாராளமாக உட்கார்ந்து பயணிக்கலாம். கால்கள் வைக்க இடவசதியும் அதிகம். டிரைவர் வைத்து ஓட்டுபவர்களுக்கு பின்னிருக்கையில் அமர்ந்து செல்வது பிடிக்கும்.

மூன்றாவது வரிசை இருக்கையில் முன்பைவிட இடவசதி அதிகம் இருந்தாலும், குழந்தைகளுக்கும், சிறிது தூரப் பயணங்களுக்கும்தான் சரிப்பட்டு வரும். ஆனால் பவர் சாக்கெட்ஸ், கப் ஹோல்டர்கள் உள்ளன. மூன்றாவது வரிசை இருக்கைகளை பக்கவாட்டில் மடித்துக்கொள்ளலாம். ஃபோர்டு எண்டேவர் போல பவர்டு டெயில்கேட் வசதியும் உள்ளது.

பழைய காரைவிட புதிய மாடலில் கேபின் அழகாக இருக்கிறது. சென்டர் கன்ஸோலில் நடுவில் உள்ள பெரிய டச் ஸ்க்ரீன் நல்ல அப்பீலைத் தருகிறது. ஸ்டீயரிங் வீலின் ஃபினிஷிங்கும் நச். ஆனால், கேபினில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் அவ்வளவு சிறப்பாக இல்லை. க்ளோவ் பாக்ஸ் சுமாராக இருக்கிறது. பாட்டில்கள், போன்கள் போன்றவற்றை வைக்க இடங்கள் அதிகமாக இருப்பது பெரிய ப்ளஸ்.

இன்ஜின்

இந்தியாவில் புதிய இனோவாவில் இருக்கப்போகும் 2GD-FTV  2.4 லிட்டர் டீசல் இன்ஜின்தான், நாம் டெஸ்ட் செய்த புதிய ஃபார்ச்சூனரில் உள்ளது. இது 150bhp சக்தியை அளிக்கிறது. டொயோட்டாவின் புதிய AC60 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான் இதில் உள்ளது. ஐடிலிங்கில் டீசல் இன்ஜின் என்பதைத் தெளிவாக உணர்த்தினாலும், 2,200 ஆர்பிஎம்-க்கு மேல் ஸ்மூத்தாக இயங்குகிறது. டர்போ லேக் அவ்வளவாக இல்லை. 3,800 ஆர்பிஎம் வரை சீராக பவர் டெலிவரி இருக்கிறது. அதற்கும் மேல் இன்ஜினில் இருந்து சத்தம்தான் அதிகமாக வருகிறதே தவிர, பவர் இல்லை.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த 2.4 இன்ஜினுடன் சிட்டி டிராஃபிக்கிலும், நெடுஞ்சாலையிலும் புதிய ஃபார்ச்சூனரை ஓட்ட எளிதாகவே இருக்கிறது. ஆனால், வேகமான டிராஃபிக்கில் பிளான் பண்ணித்தான் ஓவர்டேக் செய்ய வேண்டியுள்ளது. இனோவாவைப்போல எக்கோ, நார்மல், பவர் என மூன்று மோடுகள் உள்ளன. வேகமான டிராஃபிக்கில் ஓட்ட, பவர் மோடுதான் பெஸ்ட்.

நல்லவேளையாக, இந்தியாவில் 177bhp சக்தியை அளிக்கும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் மாடல் ஃபார்ச்சூனரும் விற்பனைக்கு வரும். இதில் சக்தியும், டார்க்கும் அதிகம் என்பதால், பெர்ஃபாமென்ஸ் ஸ்ட்ராங்காக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

ஏற்கெனவே கூறியதுபோல், புதிய ஃபார்ச்சூனரின் சேஸி இப்போது பன்மடங்கு இறுக்கமாக இருக்கிறது. அதனால், முன்பைவிட சாஃப்ட்டான ஸ்ப்ரிங்குகளையும், டாம்பர்களையும் பயன்படுத்தியுள்ளது டொயோட்டா. மோசமான சாலைகளை மிகவும் ஸ்டேபிளாகக் கடக்கிறது புதிய ஃபார்ச்சூனர். இப்போது விற்பனையில் இருக்கும் ஃபார்ச்சூனரின் குலுங்கலான ஓட்டுதல் தரம் இதில் இல்லை.

திக வேகங்களில் முன்பைவிட ரொம்பவே ஸ்டேபிளாகச் செல்கிறது புதிய ஃபார்ச்சூனர். முன்பக்கம் இருக்கும் 17-இன்ச் டிஸ்க் பிரேக்குகள் கச்சிதமாக இயங்குகின்றன.

கையாளுமையைப் பொறுத்த வரை, முன்பு போலவே பாடி ரோல் இருந்தாலும், சேஸி நல்ல சப்போர்ட் அளிப்பதால், காரை தைரியமாக வளைவுகளில் திருப்பி ஓட்ட முடியும். எண்டேவர் அளவுக்கு லைட்டான ஸ்டீயரிங் இல்லை என்பது கொஞ்சம் மைனஸ்.


முன்பைவிட ரொம்பவே அழகாக, வசதியாக, சொகுசாக இருக்கிறது ஃபார்ச்சூனர். ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் நல்ல முன்னேற்றம். காரின் உள்ளே பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்ஸ் மற்றும் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் கொஞ்சம் ஏமாற்றமளிக்கிறது. விலை உயர்ந்த வேரியன்ட்டின் விலை, இந்தியாவில் சுமார் 28 லட்சம் முதல் 30 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படலாம். நீங்கள் ஏற்கெனவே ஃபார்ச்சூனர் காரின் ரசிகராக இருந்தால், இதை நிச்சயம் விரும்புவீர்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick