SPY PHOTO - ரகசிய கேமரா

சிக்கியது எலான்ட்ரா!ஸ்பை ஷாட்: ஹூண்டாய் எலான்ட்ரா

லகெங்கும் விற்பனையாகும் பிரீமியம் செடான் காரான எலான்ட்ராவின் 6-வது ஜெனரேஷன் மாடலை, இந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறது ஹூண்டாய். இது பழைய காரைவிட 20 மிமீ அதிக நீளம், 25 மிமீ அதிக அகலம் என வளர்ந்திருப்பதால், இடவசதியில் முன்னேற்றம் இருக்கும். மிருதுவான பிளாஸ்டிக்குகள் மூலம், டேஷ்போர்டு புதிய டிஸைனில் தரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 147bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 130bhp பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 134bhp பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் - மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணியோடு விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது புதிய எலான்ட்ரா. தற்போது டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த  காரை, உடுமலைப்பேட்டை அருகே படம் பிடித்திருக்கிறார் மோட்டார் விகடனின் வாசகர் ராஜேந்திரன். கார் முழுக்க கவர் செய்யப்பட்டிருந்தாலும், க்ரோம் கிரில், அலாய் வீல்கள், ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், கூபே போன்ற வடிவம் ஆகியவை தெரிகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்