மோட்டார் நியூஸ் | Latest Motor news update - Motor Vikatan | மோட்டார் விகடன்

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...motor.vikatan.com

உலகின் அதிவேக எஸ்யுவி பென்ட்லி பென்டாய்கா!

புகழ்பெற்ற கார் தயாரிப்பாளரான பென்ட்லி, EXP-9F கான்செப்ட்டில் உருவான தனது முதல் எஸ்யுவியான பென்டாய்காவை, தனித்தன்மை மிக்க எஸ்யுவியாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் விலை 3.85 கோடி (டெல்லி எக்ஸ் ஷோரும்). ஆடி Q7 மற்றும் போர்ஷே கெய்ன் ஆகிய எஸ்யுவிகள் தயாராகும் ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் MLB-EVO பிளாட்ஃபார்மில், ஸ்டீல் மற்றும் அலுமினியத்தால் தயாரிக்கப்படும் 2.4 டன் எடைகொண்ட பென்டாய்காவை, ஆஃப் ரோடு எஸ்யுவிகளின் உச்சம் எனலாம்.

ஓட்டுநருக்குத் தேவையான தகவல்களைத் தரும் டிஸ்ப்ளே, ஸ்பீக்கர் கிரில், க்ரோம் ஸ்விட்ச்சுகள், 22 வகையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய 4/5 இருக்கைகளில் செய்யப்பட்டுள்ள டைமண்ட் வேலைப்பாடுகள், வாய்ஸ் கமாண்ட் உடனான 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 20 ஸ்பீக்கர்கள், 60 ஜிபி மெமரி கொண்ட ஆடியோ சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் டெயில்கேட், பின்பக்கப் பயணிகளுக்கான இரட்டை 10.2 இன்ச் டேப்லெட்கள் ஆகியவை காரின் லக்ஸூரியைப் பறைசாற்றுகின்றன.

மெக்கானிக்கல் பாகங்களைப் பொறுத்தவரை, லாக்கிங் டிஃப்ரன்ஷியல் போன்று செயல்படக்கூடிய பிரேக்கிங் சிஸ்டம், ஆக்டிவ் ரோல் பார் ஆகியவை இதன் அடையாளம். எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், 608bhp மற்றும் 90kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 6.0 லிட்டர் W12 ட்வின் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பு, பென்டாய்காவின் தனிச் சிறப்பு.
அதனால், 0 - 100 கி.மீ வேகத்தை 4.1 விநாடிகளில் எட்ட முடிவதுடன், அதிகபட்ச வேகமாக மணிக்கு 301 கி.மீ வரை செல்கிறது பென்டாய்கா. இந்தியாவுக்கு எனப் பிரத்யேகமாக 20 பென்டாய்கா எஸ்யுவிகளை ஒதுக்கியிருந்த பென்ட்லி நிறுவனம், அவை அனைத்தையும் இங்கு விற்பனை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது!

பாதுகாப்பில் 4 ஸ்டார் வாங்கியது பெலினோ!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick