320 கிலோ கார் மெகா சாம்பியன்ஷிப்!

சாதனை, ATV டிஸைனிங்ஞா.சுதாகர்

 

பொறியியல் துறை மாணவர்களின் திறமையையும் தொழில்நுட்ப அறிவையும் சோதிக்கும் வகையில் நடக்கும் SAE நடத்தும் பாஜா ATV (All Terrain Vehicle) வாகனப் போட்டி பிரபலமானது. அதேபோன்ற போட்டியை ‘மெகா ATV சாம்பியன்ஷிப்’ என்ற பெயரில், இந்த ஆண்டு துவங்கியுள்ளன பெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்ஸ் ஆப் இந்தியா அமைப்பும், போலாரிஸ் நிறுவனமும்.

இந்தப் போட்டியில், இந்திய அளவில் இரண்டாம் இடமும் தமிழக அளவில் முதல் இடமும் பிடித்து அசத்தியுள்ளனர் கோவையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள். கல்லூரியின் ‘ட்ரான்ஸ் ரைடர்ஸ்’ அணியின் அரவிந்த் நாராயணன் அந்த அனுபவத்தைச் சொன்னார். “போட்டி விதிமுறைகளின்படி எங்கள் காரை வடிவமைத்தோம். இதற்காக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, 305 சிசி பிரிக்ஸ் அண்டு ஸ்ட்ரேட்டன் இன்ஜினைப் பொருத்தினோம். பொதுவாக, போட்டியில் கலந்துகொள்ளும் எல்லா கார்களின் திறனும் ஒரே மாதிரிதான் இருக்கும். எனவே, குறைவான எடை, திறன் மிகுந்த சஸ்பென்ஷன், நேர்த்தியான டிரைவர் ஆகியவை சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும்.

கடந்த மார்ச் 4 முதல் 7-ம் தேதி வரை, ஒடிஸா மாநிலம் புவனேஷ்வரில் போட்டி நடந்தது. போட்டி நடந்த மூன்று நாட்களும் விதவிதமான ரேஸ்கள் நடந்தன. இறுதி நாளில் நடக்கும் ‘எர்த்குவேக் சிமுலேஷன்’ எனும் பிரிவு மிகக் கடினமானது. நிலநடுக்கம் வந்தபின்பு, கட்டிடங்கள் விழுந்துகிடக்கும் சாலை போன்று டிராக் வடிவமைத்திருப்பார்கள். இந்தப் பிரிவில் நாங்கள் முதல் பரிசு வாங்கினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick