பவர்ஃபுல் யுவோ டிராக்டர்! | Mahindra Yuvo - Best suitable for Agriculture needs - Motor Vikatan | மோட்டார் விகடன்

பவர்ஃபுல் யுவோ டிராக்டர்!

விவசாயம்: டிராக்டர்ராகுல் சிவகுரு, படங்கள்: மீ.நிவேதன்

டிராக்டர் உற்பத்தியிலும் விற்பனையிலும் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா நிறுவனம், சமீபத்தில் ‘யுவோ’ எனும் பெயரில் புதிய வகை டிராக்டர்களை அறிமுகம் செய்தது. தொழில்நுட்பத்தில் மேம்பட்ட இந்த டிராக்டர்கள், 30hp முதல் 45hp வரை பவரை வெளிப்படுத்தக்கூடிய மாடல்கள்.

இது ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் 15 hp - 57 hp சக்தி கொண்ட மஹிந்திராவின் மற்ற டிராக்டர்களுடன் சேர்ந்தே விற்பனையாகும் எனத் தெரிவித்துள்ளது மஹிந்திரா. 265DI(32HP), 275DI(35HP), 415DI(40HP), 475DI(42HP), 575DI(45HP) ஆகிய 5 வேரியன்ட்களில் கிடைக்கும் யுவோ மாடல்கள் - தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் உட்பட 15 மாநிலங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றின் ஆரம்ப விலை 4.99 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய யுவோ சீரிஸ் டிராக்டர்கள் 300 கோடி ரூபாய் முதலீட்டில், முற்றிலும் புதிய ஃப்ளாட்ஃபார்மில் நவீன தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘டிராக்டர்களில் முதன்முறையாக, கார் போன்ற சைடு ஷிஃப்ட் மெக்கானிஸம் கொண்ட 12F+3R கியர்பாக்ஸ் இதில் பொருத்தப்பட்டுள்ளது. நிலத்தைத் தயார்படுத்துவது, அறுவடை செய்வது போன்ற 30 வகையான விவசாயப் பணிகளுக்கு யுவோ மாடல் டிராக்டரைப் பயன்படுத்த முடியும்’ என்கிறது மஹிந்திரா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick