எந்திரன் - 17

இன்ஜினுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ்! - SUPER CHARGER பரணி ராஜன்

ன்ஜின் எரிதலுக்கு எரிபொருளும் காற்றும்தான் முக்கியத் தேவை. எரிபொருளை எரிக்கத் தேவையான காற்று, இன்ஜினில் சக் ஷன் ஸ்ட்ரோக் நிகழும்போது உண்டாகும் வெற்றிடத்தால் உள்ளிழுக்கப்படுகிறது. எந்த அளவுக்கு வெற்றிடம் உருவாக்கப் படுகிறதோ, அந்த அளவுக்குக் காற்று உள்ளே இழுக்கப்படுகிறது. அதன் பின்பு - சமவிகித ரிச்(Rich) அல்லது லீன்(lean) மிக்  ஷர் விகிதங்களுக்கேற்ப, தேவையான எரிபொருள் ஏற்கப்பட்டு எரிதல் நடக்கிறது. சிலசமயம் வாகனங்கள் மலைப் பகுதி அல்லது உயரமான இடங்களுக்குச் செல்லும்போது, அங்கே வளிமண்டலக் காற்றின் அழுத்தம் மற்றும் அடர்த்தி, கீழே இருக்கும் காற்றில் இருப்பதைவிடக் குறைவாக இருக்கும். அதனால், எரிபொருள் எரியத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. குறைவான எரிபொருளே எரிக்கப்பட்டு, வாகனத்துக்குக் குறைவான ஆற்றல் மற்றும் திருப்புத் திறன்தான்(Torque) கிடைக்கும்.

ரேஸ் கார்களில் சாதாரண வாகனங்களில் கிடைக்கும் ஆற்றலைவிட, அதிகப்படியான ஆற்றல் தேவைப்படும். இதற்கு இன்ஜின் அளவு பெரிதாக இருக்க வேண்டும். அப்படி வடிவமைத்தால், வாகனத்தின் எடை கூடிவிடும்; வேகம் பாதிக்கப்படும்; அதிக எரிபொருளும் செலவாகும். இத்தகைய சிக்கல்களைத் தீர்க்க, இன்ஜினுக்குத் தேவைப்படும் சிறப்பான தனி அமைப்புதான், சூப்பர் சார்ஜர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick