நிமிடத்துக்கு ஒரு பைக்! - வாசகர்களுடன் யமஹா ஃபேக்டரி விசிட்

ஃபேக்டரி விசிட் - யமஹா இந்தியாதமிழ், ராகுல், விஜி படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

‘‘என்னது... யமஹா ஃபஸினோவில் பிங்க் கலர் இல்லையா’’ என்று ஆச்சரியப்பட்டார், யமஹாவின் சென்னை பிளான்ட் ஹெட் சீஃப் முகேஷ்குமார். ‘‘நிச்சயம் அடுத்த தயாரிப்பில் இதை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம்!’’ என்று உறுதியளித்தார், யமஹா இந்தியாவின் துணைப் பொது மேலாளர் ரியூஜி கவாஷிமா.

‘மோட்டார் விகடன்’ சார்பில் ஐந்து வாசகர்களை, தனது ஃபேக்டரி விசிட்டுக்காக அழைத்திருந்தது யமஹா. இந்த விசிட்டில்தான் யமஹாவின் டெக்னீஷியன்களைக் கேள்விகளாலும் சந்தேகங்களாலும் துளைத்தெடுத்தனர் நமது வாசகர்கள். கல்லூரி மாணவியும் ரேஸருமான ரெஹானா, குடும்பத் தலைவி மேகலா, ரேஸர் அரவிந்த் பாலாஜி, L&T Infotech ஊழியர் கோபால கிருஷ்ணன், மெக்கானிக்கல் இன்ஜினீயர் அர்ஜூன் என்று வெரைட்டியான ஐந்து வாசகர்களைத் தேர்ந்தெடுத்து, யமஹா தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றிருந்தோம். அக்டோபர் 21-ம் தேதி வெள்ளிக்கிழமை, யமஹா தொழிற்சாலையின் கதவுகள் திறக்க, மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்றார்கள் யமஹா அதிகாரிகள். பள்ளியில் கடைசி பெல் அடித்தவுடன் வீட்டுக்குக் கிளம்பும் குழந்தைகள்போல், தொழிற்சாலைக்குள் உற்சாகத்தோடு நுழைந்தார்கள் வாசகர்கள்.

பைக் தயாரிப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை. இன்ஜின் தயாரிப்பு, பாடி பெயின்ட்டிங், கிராஃபிக்ஸ், குவாலிட்டி செக்கிங், அசெம்ப்ளி செக்ஷன், டெஸ்ட் டிரைவ் என்று ஒரு பைக் டெலிவரி ஆவது, ஒரு குழந்தை பிரசவிப்பதைப் போன்ற உணர்ச்சிகரமான விஷயம். ஒரு சின்னக் கவனக் குறைவு, மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கவைக்கும் அபாயமாக மாறிவிடக்கூடிய வாய்ப்பு தொழிற்சாலைகளில் உண்டு. பைக் தொழிற்சாலையும் அப்படியே! மேன் மேக்ஸிமம் - மிஷின் மினிமம் என்பதுபோல், யமஹா தொழிற்சாலையில் இயந்திரங்களைவிட, பரபரப்பாகச் செயல்படும் 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள். நமது வாசகர்களை ஒவ்வொரு இடத்துக்கும் அழைத்துச் சென்று பாடம் எடுத்துக்கொண்டே, ‘‘அசெம்பிளி டீம்... பேனல் 2-வை செக் பண்ணுங்க’’ என்று தன் வேலையிலும் கண்கொத்திப் பாம்பாக இருந்தார் முகேஷ் குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick