இத்தாலி ஸ்கூட்டர்ஸ்... வின்னர் எது?

ஒப்பீடு : வெஸ்பா - ஏப்ரிலியாதொகுப்பு: ராகுல் சிவகுரு

ந்திய இரு சக்கர வாகனச் சந்தையை, கடந்த சில ஆண்டுகளாகக் கவனித்துப் பார்த்தால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். அதாவது, ஸ்கூட்டர்களின் ஆதிக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதுதான். நகர டிராஃபிக்கில் எளிதாகப் பயணிக்கவும், குடும்பத்தில் உள்ள எல்லோரும் பயன்படுத்தும்படியான வடிவமைப்பும், பொருட்கள் வைக்க தாராளமான இடம் என ஸ்கூட்டர்கள் பிராக்டிக்கலாக இருப்பதே இதற்குக் காரணம்.

பிரீமியம்  பெர்ஃபாமென்ஸ் பைக்குகளைப்போல, பிரீமியம் பெர்ஃபாமென்ஸ் ஸ்கூட்டர்களுக்கான தேவை தற்போது இருக்கிறது. இதனை நன்கு உணர்ந்துள்ள பியாஜியோ நிறுவனம், வெஸ்பா SXL-150 மற்றும் ஏப்ரிலியா SR-150 ஆகிய இரு ஸ்கூட்டர்களையும், அப்படிப்பட்டவர்களை மனதில் வைத்துத்தான் தயாரித்துள்ளது. இரண்டு ஸ்கூட்டர்களிலும் இருப்பது ஒரே இன்ஜின்தான் என்றாலும், ரெட்ரோ டிஸைனைக்கொண்ட வெஸ்பா மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தைக்கொண்டுள்ள ஏப்ரிலியா ஆகியவற்றில் எது பெஸ்ட்?

டிஸைன் & சிறப்பம்சங்கள்

இந்த இரண்டு ஸ்கூட்டர்களையும் ஒரே நிறுவனம்தான் தயாரிக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. இவற்றை அருகருகே நிற்க வைத்தால், துளிகூட ஒற்றுமை இல்லை. வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கே உரித்தான ரெட்ரோ டிஸைன் க்ளாஸ் ரகம். SXL-150 மாடலில் உள்ள சதுர வடிவிலான ஹெட்லைட், வட்ட வடிவ மிரர்கள், பிரேக் லீவர்களில் செய்யப்பட்டுள்ள க்ரோம் வேலைப்பாடுகள், கலர் ஆப்ஷன்கள், பாடி பேனல்களின் வடிவமைப்பு போன்றவை அதற்கு உறுதுணையாக இருக்கின்றன. வெஸ்பாவின் டிஸைனுக்கு அப்படியே நேர் எதிர் திசையில் பயணிக்கும் ஏப்ரிலியா SR-150, ஸ்போர்ட்டியான ஸ்டைலிங் உடன் அசத்துகிறது. ஏப்ரிலியாவின் ரேஸிங் பின்புலம் இங்கு அப்பட்டமாகத் தெரிகிறது. கூம்புபோல ஷார்ப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள முன்பகுதியில், இரட்டை ஹெட்லைட் அழகாக பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரிலியா RSV4 பைக்கில் இருக்கக்கூடிய கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்திலான கிராஃபிக்ஸ், இந்த SR-150 ஸ்கூட்டருக்குப் பொருத்தமானதாக இருக்கிறது. ஷார்ப்பான டெயில் லைட் காரணமாக, பின்பக்க வடிவமைப்பும் ஸ்போர்ட்டியாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick