அச்சீவ் செய்யுமா ஹீரோ அச்சீவர்?

ஹீரோ அச்சீவர் 150 - ஃபர்ஸ்ட் ரைடுதமிழ், படங்கள்: தென்றல்

‘புதிய பைக்’ என்று  இந்த அச்சீவரைச் சொல்ல முடியாது; ஆனால், ‘புதிய அச்சீவர்’ என்று இந்த பைக்கைச் சொல்லலாம். கம்யூட்டிங் பைக்கர்களுக்கு அச்சீவர் 10 ஆண்டுகளாகப் பரிச்சயம். தேசிய விருது வாங்கும் படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாது; கமர்ஷியலாக ஹிட் ஆகும் படங்களுக்கு நல்ல படங்கள் என்று சர்ட்டிஃபிகேட் கொடுக்க முடியாது. ‘அச்சீவர்’ தேசிய விருது ரகம். இது அச்சீவரை ஓட்டியவர்களுக்குத் தெரியும். ஆனால், விற்பனையில் பெரிதாக அச்சீவ் செய்யவில்லை பழைய அச்சீவர்.

ரிஃபைன் செய்யப்பட்ட இன்ஜின், ஸ்மூத்தான 5 ஸ்பீடு கியர் பாக்ஸ், கையைக் கடிக்காத விலை என்று பட்ஜெட்டோடு பெர்ஃபாமென்ஸை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல சாய்ஸாக இருந்தது அச்சீவர். ஆனால் பல்ஸர், FZ, யூனிகார்ன், அப்பாச்சி போன்ற ஸ்டைல் பைக்குகளின் வரவால், அதிகமான சாய்ஸாக இல்லாமல் போனது. இப்போது, ‘கத்திச்சண்டை’ வடிவேலு போல ‘ஐ’யம் பேக்’ என்று திரும்பவந்திருக்கிறது அச்சீவர். நாம் ‘புதிய அச்சீவர்’ என்று அழுத்திச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. அச்சீவர் மட்டுமில்லை; ஹீரோ மோட்டோ கார்ப்பில் இருந்து இனி வரும் பைக்குகள் எல்லாமே புதிய பைக்குகள்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்