ஆரியாவின் மிக்ஸா டாடா ஹெக்ஸா? - ஜனவரி 2017 ரிலீஸ்

ஃபர்ஸ்ட் டிரைவ் - டாடா ஹெக்ஸாதமிழ் முருகன், படங்கள்: தே.அசோக்குமார்

லகின் விலை குறைந்த காரையே தயாரிக்க முடிந்த டாடாவுக்கு, விலை அதிகமான காரைத் தயாரிப்பது சவாலான விஷயமா என்ன? டாடாவின் பிரீமியம் எஸ்யூவி-யாக விற்பனைக்கு வரவிருக்கிறது ஹெக்ஸா. 2015 ஜெனிவா மோட்டார் ஷோவில், ஹெக்ஸாவின் கான்செப்ட் டிஸைன் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த அதே சமயம், போட்டி கார் நிறுவனங்களையும் புருவம் உயர்த்தவைத்துவிட்டது. ஆரியாதான் ஹெக்ஸா உருவானதற்குக் காரணம் என்கிறது டாடா. ஹெக்ஸா, சென்னையில் ஆன் ரோடுக்கு வரும்போது சுமார் 21 லட்ச ரூபாய்  விலைக்கு விற்பனைக்கு வரலாம் என்கிறார்கள். மஹிந்திரா XUV, டொயோட்டா இனோவா க்ரிஸ்டா போன்ற கார்களுடன் போட்டியிடும் ஹெக்ஸாவை ஹைதராபாத்தில் டெஸ்ட் செய்தேன்.

டிஸைன்

பொதுவாக, டாடா கார்களின் டிஸைன் மீது அவ்வளவு ஈர்ப்பு இருக்காது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? நீங்கள் டிஸைனுக்காக ஒரு காரை செலெக்ட் செய்கிறீர்கள் என்றால், நிச்சயம் அது டாடாவினுடையதாக இருக்காது. ஆனால், ஹெக்ஸா இதற்கு விதிவிலக்கு. இதற்குக் காரணம், ஆரியா. ‘ஆரியாவை ஆதாரமாக வைத்துத்தான் ஹெக்ஸாவை டிஸைன் செய்திருக்கிறோம்’ என்று டாடாவின் டிஸைன் பிரிவு தலைவர் பிரதாப் போஸ் தலைமையிலான குழு தெரிவித்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ, எம்பிவி சாயலில் இருந்து தப்பிக்க முடியவில்லை ஹெக்ஸாவால். ஆனால், இது எஸ்யூவியா, எம்பிவியா, க்ராஸ்ஓவரா என்று குழம்பாமல் இருக்க முடியவில்லை. எனினும், ஸ்ட்ராங்கான/போல்டான டிஸைனுக்கு ஒரு சல்யூட். திக்கான பானெட், ஹெக்ஸகன் வடிவ கிரில், ஸ்ட்ரெட்ச்டு ஹெட்லைட்ஸ் என எல்லாமே ஆல் இஸ் வெல். ஸ்டைலிஷான பம்பர், மிகப் பெரிய ஏர் டேம் போன்றவற்றுக்கு மேலும் ஸ்டைல் சேர்க்கிறது டே-டைம் ரன்னிங் லைட்ஸ். இது பெரிய கார் என்பதற்கு இதன் 19 இன்ச் வீல்களே போதும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick