ஏமியோ எனும் ஏஞ்சல்!

ஃபோக்ஸ்வாகன் - ஏமியோ-டீசல்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

முதலில் ஃபோக்ஸ்வாகனின் காம்பேக்ட் செடான் ஏமியோ, பெட்ரோல் இன்ஜினுடன்தான் விற்பனைக்கு வந்தது. ஆனால், அந்த பெட்ரோல் இன்ஜினே காருக்குப் பெரிய மைனஸ் பாயின்ட்டாக இருந்ததுதான் சோகம். உடனடியாக இப்போது டீசல் ஏமியோவைக் களமிறக்கிவிட்டது ஃபோக்ஸ்வாகன்.

டீசல் ஏமியோவில் முன்னேற்றப்பட்ட 1.5 லிட்டர், 4 சிலிண்டர் TDI இன்ஜின் உள்ளது. இப்போது வென்ட்டோவிட அதிகமாக  5bhp சக்தியையும், அதே பழைய 25.0 kgm டார்க்கையும் அளிக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் உள்ளது. காரின் வெளிப்புறத்தில் மாற்றங்கள் இல்லை. 330 லிட்டர் பூட் இடவசதி இருந்தாலும், போட்டி கார்களுடன் ஒப்பிடும்போது குறைவுதான்.

ஹைலைன் வேரியன்ட்டில் டச் ஸ்கிரீன் சிஸ்டம், ரியர் வியூ கேமரா, கார்னரிங் லைட்ஸ், ஆட்டோமேட்டிக் வைப்பர்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், 2 காற்றுப் பைகள், ஏபிஎஸ் ஆகிய வசதிகள் உள்ளன. டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் மாடலில் மட்டும் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு வசதிகள் உள்ளன. பின் இருக்கையில் இடவசதி குறைவுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick