டீசல் டிஸ்யூம்!

ஒப்பீடு - ஏமியோ VS ஆஸ்பயர்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர், ஃபோக்ஸ்வாகன் ஏமியோ ஆகிய இரண்டு கார்களின் டீசல் மாடல் வாங்க நீங்கள் திட்டமிட்டு இருந்தால், நிச்சயம் இவற்றின் பெர்ஃபாமென்ஸ் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கும். இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பவர்ஃபுல் டீசல் காம்பேக்ட் செடான்கள் இவை. இரண்டும் ஃபன் - டு - டிரைவ், பெர்ஃபாமென்ஸில் எப்படி?

தியரிட்டிக்கலாகப் பார்த்தால், 110bhp, 25 kgm சக்தியுடன் ஏமியோதான் இங்கே சக்திவாய்ந்த கார். ஆஸ்பயர் 100 bhp, 21.5 kgm கொண்டிருக்கிறது. இரண்டு கார்களுக்கும் இடையேயான வித்தியாசங்களில், எடை மிக முக்கியமானது. ஏமியோவைவிட 115 கிலோ எடை குறைவாக, 1,048 கிலோ எடைகொண்டிருக்கிறது ஆஸ்பயர். ஈரமான சாலையில் நாம் டெஸ்ட் செய்தபோது, 0 - 100 கி.மீ வேகத்தை 10.74 விநாடிகளில் கடந்தது ஏமியோ. இது ஆஸ்பயரைவிட 0.4 விநாடிகள் க்விக். 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுக்கு ஜெர்மன் ஜாம்பவான் ஃபோக்ஸ்வாகன் செய்துள்ள மாற்றங்கள், பவர் டெலிவரியில் நல்ல முன்னேற்றங்களைக் கொடுத்திருக்கிறது. 2,000 ஆர்பிஎம்-ல் இருந்து 5,000 ஆர்பிஎம் வரை ஸ்ட்ராங்காக ரெவ் ஆகிறது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஷிஃப்ட் தரம் சிறப்பாக உள்ளது.

த்ரில்லில் ஆஸ்பயர் கொஞ்சம் டல்லாக இருந்தாலும், நேர்த்தியான பவர் டெலிவரியைக் கொண்டுள்ளது. இதனால், நகருக்குள் ஓட்ட எளிதாக இருக்கிறது ஆஸ்பயர். விரட்டி ஓட்டினாலும், ஏமியோபோல பன்ச்சியான மிட் ரேஞ்ச் இல்லை. கியர் ஷிஃப்ட் தரம் சுமார்தான். ஃபோர்டு டீசல் இன்ஜின் செம ஸ்மூத். ஆனால், 3,000 ஆர்பிஎம்-க்கு மேல் அதிக சத்தத்துடன் இயங்குகிறது.

ஃபோக்ஸ்வாகன் ஏமியோ, ஓட்டும்போது நம்பகமான உணர்வைத் தருகிறது. எலெக்ட்ரிக் ஸ்டீயரிங் என்பதால், ஃபீட்பேக் குறைவுதான். கொஞ்சம் இறுக்கமான செட்-அப் என்பதால், வளைவுகளில் கையாளுமை நன்றாகவே உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick