அசத்தும் ஹைபிரிட் அக்கார்டு! | First Drive - honda accord - Motor Vikatan | மோட்டார் விகடன்

அசத்தும் ஹைபிரிட் அக்கார்டு!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹோண்டா அக்கார்டுதொகுப்பு: ராகுல் சிவகுரு

ஹோண்டா அக்கார்டு... கார் ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமான இந்த காருக்கு அறிமுகம் தேவையில்லை. கடந்த 2000-ம் ஆண்டில் இந்தியாவில் வெளியான இந்த காரின் (ஆறு, ஏழு, எட்டு) ஆகிய மூன்று தலைமுறை மாடல்களை  இங்கு விற்பனை செய்தது ஹோண்டா. லக்ஸூரி செக்மென்ட்டில் ஏற்பட்ட மந்தநிலையும் அதிக விலையும் இந்திய ஷோரூம்களைவிட்டு இந்த காரை வெளியேற்றியது. தற்போது ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன், லேட்டஸ்ட் அவதாரத்தில் அசத்தலாகக் களமிறங்கியிருக்கிறது ஒன்பதாவது தலைமுறை அக்கார்டு.

இதன் முக்கியப் போட்டியாளரான டொயோட்டா கேம்ரியில் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஹைபிரிட் என ஆப்ஷன்கள் இருக்க, அக்கார்டில் பெட்ரோல் இன்ஜின்கொண்ட மாடலை இந்தியாவுக்குக் கொண்டுவரும் எண்ணத்தில் ஹோண்டா இல்லை. இதற்கு ஹைபிரிட் கார்களின் மீதான குறைவான கலால் வரி மற்றும் வாட் விதிப்பு ஒரு காரணம் என்றால், ஹோண்டா தனது டெக்னாலஜி பலத்தைக் காட்ட முடிவெடுத்தது மற்றொரு காரணம். டொயோட்டா நிறுவனம், கேம்ரியை இந்தியாவில் CKD முறையில் அசெம்பிள் செய்வது குறிப்பிடத்தக்கது. ஆனால், அக்கார்டு ஹைபிரிட் காரை CBU முறையில் முழுவதுமாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்போகிறது. எனவே, இறக்குமதி வரி சேர்வதால், காரின் விலை கேம்ரியைவிட அதிகமாகவே இருக்கும். கபாலி ரஜினி பாணியில், ‘‘நான் வந்துட்டேன்னு சொல்லு; திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’’ எனும் கர்ஜனையுடன் வந்திருக்கும் ஹோண்டா அக்கார்டு எப்படி இருக்கிறது?

டிஸைன் & தொழில்நுட்பம்

பழைய காருடன் ஒப்பிடும்போது, புதிய அக்கார்டு ஹைபிரிட் காரின் டிஸைன் நன்றாக இருக்கிறது. முன்பக்கம் கச்சிதமான சைஸில் இருப்பதுடன், பக்கவாட்டுத் தோற்றமும் சீரான வடிவமைப்பினால் ஸ்டைலாக இருக்கிறது. ஹைபிரிட் என்பதைச் சொல்லும் விதமாக, அக்கார்டு காரில் ஆங்காங்கே நீல நிற வேலைப்பாடுகள் இருக்கின்றன. பழைய காரைவிட புதிய காரின் நீளம் மற்றும் வீல்பேஸ் குறைந்துள்ளதுடன், காரின் கட்டுமானமும் 40 சதவிகிதம் கூடுதல் இறுக்கமடைந்துள்ளது. இதனால், காரின் கையாளுமையில் முன்னேற்றம் இருக்கும் என்கிறது ஹோண்டா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick