பிரியோவின் அடுத்த அவதாரம்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹோண்டா பிரியோதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

நீண்ட காலமாகவே இந்தியாவில் கண்டுகொள்ளப் படாமல் இருந்த கார், ஹோண்டா பிரியோ. இந்த காருக்குப் பிறகு ஹோண்டா அறிமுகப்படுத்திய கார்கள் ஏராளம். விற்பனையில் இருக்கும் இந்த ஐந்து ஆண்டுகளில், 2012-ம் ஆண்டில் மட்டும் ஆட்டோமேட்டிக் மாடல் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு சத்தம் இல்லை. இப்போதுதான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா. காரின் வெளிப்புறத்திலும், உள்ளேயும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் உள்ளன.

டிஸைனைப் பொறுத்தவரை காரின் அடிப்படைத் தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால், காரில் மேலும் ஸ்டைல் சேர்த்துள்ளனர். முக்கியமாக, முன்பக்க கிரில் புதிய டிஸைனில் பார்க்க ஸ்மார்ட்டாக இருக்கிறது. முன்பக்க பம்பரும் இப்போது செம சிக். பின்பக்க டிஸைனில் மாற்றம் இல்லை. டெயில் லைட்டுகளின் டிஸைன் மட்டும் லேசாக மாறியுள்ளது. புதிதாக ஸ்பாய்லர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரியோவின் உள்ளே கேபினிலும், டேஷ்போர்டிலும்தான் மாற்றங்கள் தெரிகின்றன. BR-V, அமேஸ் ஆகிய கார்களில் இருந்த டேஷ்போர்டு, பிரியோ ஃபேஸ்லிஃப்ட்டுக்கு வந்துவிட்டது. டேஷ்போர்டில் ஆங்காங்கே பயன் படுத்துள்ள சில்வர் நல்ல அப்பீலைத் தருகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிஸைனும் மாறியுள்ளது. டாப் வேரியன்டில் கிடைக்கும் ஆல்-பிளாக் வண்ண இருக்கைகள் செம ஸ்போர்ட்டி.

ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏ.சி சிஸ்டத்துக்கு எலெக்ட்ரிக் கன்ட்ரோல்கள், எலெக்ட்ரிக் ஃபோல்டிங் ரியர் வியூ மிரர்கள்,  2-DIN ஆடியோ சிஸ்டம், ப்ளூடூத் ஆகிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மற்றபடி பிரியோ ஃபேஸ்லிஃப்ட்டில் பெரிய மாற்றங்கள் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick