செம கெத்து கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - வால்வோ S90கட்டுரை, படங்கள்: ர.ராஜா ராமமூர்த்தி

ந்தியாவில் வால்வோ பிராண்ட் இமேஜை உயர்த்தியது, XC90 கார்தான். தாங்கள் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே XC90 எஸ்யூவி விற்பனையாகிறது என்கிறது வால்வோ. அந்த தைரியத்தில் மெர்சிடீஸ் பென்ஸ் E-கிளாஸ், பிஎம்டபிள்யூ 5 சிரீஸ் கார்களுடன் மோத, S90 செடானைக் களமிறக்க உள்ளது வால்வோ. ஏன் இந்தத் துணிச்சல்?

டிஸைன்

அனைவரின் ஆதரவையும் பெற்றுள்ள XC90 காரும், S90 செடானும் அடிப்படையில் நெருக்கமானவை. இரண்டுமே வால்வோவின் புத்தம் புதிய டிஸைன் தீம், SPA எனப்படும் ஸ்கேலபிள் பிளாட்ஃபார்ம் ஆர்க்கிடெக்ச்சர், இன்டீரியர்ஸைக் கொண்டுள்ளன.

புகைப்படங்களில் S90 காரைப் பார்க்கும்போது பென்ஸ் S கிளாஸ், பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் போன்ற ‘ஒரு செக்மென்ட் மேல் உள்ள கார்களுக்குப் போட்டியான காரோ’ என பிரீமியமான தோற்றம் இருப்பதுதான் இந்த காரின் மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட். நேரில் பார்க்கும்போதுதான் இதன் அளவுகோல்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீளமான பானெட், Thor’s Hammer ஹெட்லைட்ஸ் என பக்கா மாடர்ன் டிஸைன். சாலையில் எல்லோருமே காரைத் திரும்பிப் பார்க்கிறார்கள். கூபே போல் நீளமான ரூஃப்லைன், மிகப் பெரிய டெயில் லைட்ஸ் என பிரீமியம் கார்களின் டிஸைன் இலக்கணத்தை மாற்றியமைக்கிறது S90.

காரின் உள்பக்கம் XC90 காரில் இருந்த அதே அதிநவீன சொகுசு உணர்வு இருக்கிறது. அதுதான் வால்வோவின் திட்டமும்கூட. காரில் பல வேரியன்ட்டுகள் இல்லை. ஒரே இன்ஸ்க்ரிப்ஷன் வேரியன்ட்தான். எல்லா வசதிகளுமே ஸ்டாண்டர்ட் என்பதால், எல்லா வாடிக்கையாளர்களுக்குமே அதே உயர்ந்த உணர்வைத் தருகிறது S90. உயர்ரக லெதர், ஒரிஜினல் மரவேலைப்பாடுகள், வெர்ட்டிக்கல் ஏ.சி வென்ட்டுகள், க்ரோம் எஃபெக்ட்ஸ் என கண்ணில் ஒற்றிக்கொள்வது போல இருக்கிறது உள்பக்கம்.

XC90 காரில் இருக்கும் அதே ஸ்டீயரிங் வீல், பிடித்துக்கொள்ள கச்சிதமாக இருக்கிறது. முன்பக்க இருக்கைகளுக்கு வென்டிலேஷன் ஸ்டாண்டர்ட். வெயில் காலங்களில், ‘யப்பா... என்ன ஒரு குளிர்ச்சி...’ பரவசமான அனுபவம். போல்ட்ஸ்ரிங், லம்பர் சப்போர்ட்ஸ் சிறப்பாக உள்ளன.  சிறப்பான வேலைப்பாடுகள்கொண்ட ஸ்டார்ட் பட்டனைத் திருகி, இன்ஜினை ஆன் செய்யும்போதே கெத்தாக இருக்கிறது.

டிரைவர் இருக்கையில் இருந்து பார்க்கும்போது சாலை தெளிவாக இருந்தாலும், நடுவே உள்ள ரியர் வியூ மிரர் பெரிதாக இருப்பது, கொஞ்சம் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. கதவுகளில் அழகாக இணைக்கப்பட்டுள்ள Bowers & Wilkins ஸ்பீக்கர் சிஸ்டத்தில் பண்பலை இசைகூட உயர்தரமாகக் கேட்கிறது. குறிப்பாக, Bass செம ஸ்மூத்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick