சீறும் சிறுத்தை! | jaguar xf - test drive - Motor Vikatan | மோட்டார் விகடன்

சீறும் சிறுத்தை!

டெஸ்ட் டிரைவ் - ஜாகுவார் XFதொகுப்பு: ராகுல் சிவகுரு

குறைவான எடை, பெரிய கேபின், முன்னேற்றப்பட்ட லக்ஸூரி அளவுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, புதிய XF காரை ஜாகுவார் நிறுவனம் வடிவமைத்துள்ளது. காரின் கட்டுமானத்தில் அதிகளவில் அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், பழைய காரைவிடப் புதிய XF காரின் எடை, சுமார் 190 கிலோ வரை குறைந்துள்ளது. இதன் 5 மீட்டர் நீளம் மற்றும் அதிக வீல்பேஸ் சேர்ந்து, அதிக இடவசதியை வழங்குகின்றன. எனவே, ஒரு பிராக்டிக்கலான பேக்கேஜாக, அனைவருக்கும் பிடிக்கும்விதமாக, XF காரை ஜாகுவார் நிறுவனம் தயாரித்துள்ளதா?

டிஸைன்

புதிய XF காரின் தோற்றம், பழைய காரைப்போலவே இருக்கிறது. ஜாகுவார் கார்களுக்கே உரித்தான டிஸைன் அம்சங்களைக்கொண்டிருக்கும் இதன் சைஸ் மட்டுமே, இது புதிய கார் என்பதை நினைவுப்படுத்துகிறது. டாப் வேரியன்ட்டான Portfolio-வில் இருக்கும் LED ஹெட்லைட்ஸ் மற்றும் 18 இன்ச் அலாய் வீல்கள், காரின் ஸ்டைலிங்கை உயர்த்துகின்றன. ஜாகுவார் ஸ்பெஷல் J வடிவ LED டே டைம் ரன்னிங் லைட்ஸ் மற்றும் F-Type காரில் இருப்பது போன்ற LED டெயில் லைட்ஸ், இரட்டை எக்ஸாஸ்ட் பைப் ஆகியவை, காருக்கு ஸ்போர்ட்டியான லுக்கைத் தருகின்றன. தாழ்வான பானெட் மற்றும் உயரமான பூட் பகுதியும் இதற்கு உறுதுணையாக இருக்கின்றன.

கேபின் & சிறப்பம்சங்கள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick