அசத்துமா அர்பன் க்ராஸ்?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஃபியட் அர்பன் க்ராஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஃபியட் அர்பன் க்ராஸ்... க்ராஸ்ஓவர் ஹேட்ச்பேக்காக வடிவமைக்கப்பட்டுள்ள அவென்ச்சுராவின் பின்பக்கம் இருக்கும் ஸ்பேர் வீல் பிடிக்கவில்லை என்பவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டது என்பது, காரைப் பார்க்கும்போதே தெரிகிறது. இதனால், அர்பன் க்ராஸின் பூட் ஸ்பேஸை எளிதாக அணுகலாம் என்பதுடன், காரைச் சுலபமாக ரிவர்ஸ் எடுத்து பார்க்கிங் செய்ய முடிகிறது. நெரிசல் மிக்க நகரச் சாலைகளுக்கான காராக, அர்பன் க்ராஸ் காரை பொசிஷன் செய்துள்ளது ஃபியட்.

என்னென்ன மாற்றங்கள்?

அவென்ச்சுராவின் டிஸைன் சூப்பராக இருப்பது அனைவரும் அறிந்ததே. எனவே, அதை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அர்பன் க்ராஸின் தோற்றமும் ஸ்டைலாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், காரை உற்று நோக்கினால், பெரிய ஸ்கிட் பிளேட், பியானோ பிளாக் ஃபினிஷ் கொண்ட கிரில் என அவென்ச்சுராவைவிட அர்பன் க்ராஸில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. ஆக்டிவ், டைனமிக், எமோஷன் ஆகிய மூன்று வேரியன்ட்டிலும் ஷார்ப்பான ஹெட்லைட்ஸ், முன் - பின்பக்க ஸ்கிட் பிளேட்ஸ், பெரிய பக்கவாட்டு கிளாடிங், பின்பக்க ஸ்பாய்லர், LED டெயில் லைட்ஸ், ரூஃப் ரெயில், 16 இன்ச் அலாய் வீல்கள், 5 இன்ச் டச் ஸ்கிரீன் போன்றவை ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ‘Powered by Abarth’ என்ற அடைமொழியுடன் வரும் எமோஷன் வேரியன்ட்டில், அபார்த் கார்களுக்கே உரிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick