எட்டியோஸ் எட்டிப் பார்க்கலாம்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - டொயோட்டா எட்டியோஸ்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

ட்டியோஸ் கார், டாக்ஸி செக்மென்ட்டுக்கு என எழுதி வைக்காத குறைதான். அதிக இடவசதி, குறைந்த பராமரிப்புச் செலவுகள், நம்பகத்தன்மை என பிராக்டிகல் கார் எட்டியோஸ். ஆனால், பார்க்க சுமாராக இருந்ததால், மக்களின் காராக மாறவில்லை. எட்டியோஸை மக்களின் காராக எப்படி மாற்றுவது? ஃபேஸ்லிஃப்ட் மூலம் விடை தேடியிருக்கிறது டொயோட்டா.

பிளாட்டினம் எனப் பெயர் கொண்ட பேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கத் தோற்றத்தில்தான் அதிக மாற்றங்கள். பார்க்கவும் நன்றாக இருக்கிறது. முன்பக்க பம்பர் இப்போது அகலமாகியுள்ளது. புதிய கிரில், பார்க்க ஸ்மார்ட். பிரீமியமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக க்ரோமை அதிகமாகப் பயன்படுத்தாமல், கிரில்லில் அளவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஹெட்லைட் டிஸைன் மாற்றப்படவில்லை. பேனல்களிலும் மாற்றங்கள் இல்லை. எனவே, காரின் அடிப்படைத் தோற்றம், அளவுகோல்கள் அப்படியேதான் இருக்கின்றன. பின்பக்கம் எதிர்பார்த்ததுபோலவே பம்பர் டிஸைன் மாறியுள்ளது. ஆனால், இவை காரின் அப்பீலைக் கூட்டவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்