மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்... இப்போது ஹெட்ச்பேக் கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா e2o ப்ளஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஹிந்திராவின் எலெக்ட்ரிக் காரான e2O, குறைவான நீளத்துடன் இரண்டு கதவுகளை மட்டுமே கொண்டிருந்தது. மேலும், இதில் இருந்த பேட்டரியால், 100 கி.மீ-க்கும் குறைவான தூரம் மட்டுமே செல்ல முடிந்தது. இது தவிர, விலையும் அதிகம். இப்படி, இந்த காரில் குறைகளாகத் தெரிந்த பல விஷயங்களைச் சரிசெய்து, 'e2O ப்ளஸ்' என்ற பெயரில் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது மஹிந்திரா. அதாவது, போதுமான நீளத்துடன் நான்கு கதவுகள், 100 கி.மீ-க்கும் அதிகமான தூரம் செல்லக்கூடிய அளவுக்கு மேம்படுத்தப் பட்டுள்ள பேட்டரி திறன், ஆட்டோமேட்டிக்  கியர்பாக்ஸ் உள்ள ஹேட்ச்பேக்குடன் ஒப்பிடக்கூடிய விலை எனக் களமிறங்கியிருக்கும் e2O ப்ளஸ் எப்படி இருக்கிறது?

டிஸைன் & கேபின்

e2O காரின் வித்தியாசமான டிஸைனுடன் ஒப்பிடும்போது, e2O ப்ளஸ் காரின் டிஸைன், ஒரு வழக்கமான ஹேட்ச்பேக் காரையே நினைவுபடுத்துகிறது. ஆனால், காரின் அளவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. 300 மிமீ கூடுதல் வீல்பேஸ் காரணமாக, கேபின் இடவசதி அதிகரித்திருக்கிறது. e2O காரில் இருந்த அதே புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ்தான் இதிலும். காரின் பின்பக்கத்தில், புதிதாக ஸ்பாய்லர் மற்றும் LED டெயில் லைட்ஸ் இருக்கின்றன. காருக்குள் நுழையும்போது, அதிகரிக்கப்பட்ட பின்பக்க இடவசதியே முதலில் கவனத்தைக் கவர்கிறது. e2O ப்ளஸ் காரின் 3.6 மீட்டர் நீளத்துடன் ஒப்பிடும்போது, சிறப்பான இடவசதி கிடைத்திருப்பது ஆச்சர்யம். முன் மற்றும் பின்பக்கம் உட்கார்பவர்களுக்குப் போதுமான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் கிடைக்கிறது. இருக்கைகளும் சொகுசாக இருப்பதுடன் போதுமான சப்போர்ட்டையும் அளிக்கின்றன. 135 லிட்டர் பூட் ஸ்பேஸ் குறைவுதான் என்றாலும், இரு சின்னப் பைகள் வைக்கலாம்.

e2O காரில் இருந்த அதே டேஷ்போர்டுதான் e2O ப்ளஸ் காரிலும் இருந்தாலும், சென்டர் கன்ஸோலில் இருக்கக்கூடிய டச் ஸ்கிரீன் புதிது. இதில் ஆண்ட்ராய்டு போனை கனெக்ட் செய்ய முடிவது சிறப்பு. இதனுடன் நான்கு கதவுகளுக்கும் பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மிரர்கள், கீ-லெஸ் என்ட்ரி ஆகியவை இருக்கின்றன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் வேகம், மைலேஜ், பேட்டரி சார்ஜ், Distance To Empty போன்ற தகவல்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஆனால், கேபினில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக், ஃபேப்ரிக்ஸ், சுவிட்சுகளின் தரம் மலிவாக இருக்கின்றன.

பெர்ஃபாமென்ஸ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick