விகடன் ஹாக்கத்தான்

மு.சா.கெளதமன், படம்: தி.குமரகுருபரன்

மூகத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் இளைஞர்களைச் சாதிக்கத் தூண்டும் விதத்தில், விகடன் அவர்களுக்கான தளத்தை அமைத்துக்கொடுத்தது. தேசத்தின் பல மூலைகளில் இருந்துவந்திருந்த தீர்வுகளைப் பட்டை தீட்ட ஆரம்பித்தது. இதில், இறுதிக் கட்டத்துக்கு 40 ஐடியாக்களும் 140 பேரும் அழைக்கப்பட்டனர். விகடன் நிறுவனத்தின் ஹாக்கத்தானுக்கு நாஸ்காம், தி ஸ்டார்ட்அப் சென்டர், ஐசிடிஏசிடி, தாட் வொர்க்ஸ், ஹசுரா மற்றும் அமேஸான் வெப் சர்வீஸஸ் போன்ற நிறுவனங்கள் சிரித்த முகத்துடன் ஸ்பான்ஸர்களாகவும், பார்ட்னர்களாகவும் கைகோர்த்தனர். தமிழகத்தின் பல முன்னணி பிசினஸ்மேன்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இதில் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளைச் சொன்னார்கள். ‘மோட்டார் விகடன்’ வாசகர்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில், இரண்டு புராஜெக்ட்கள் வந்திருந்தன. அதில் ஒன்று, மூன்றாவது பரிசை வென்றது.

ஸ்மார்ட் ஹெல்மெட்

‘சார், ஹெல்மெட் போடுங்க’ என்று இனி யாரும் அட்வைஸ் செய்யத் தேவை இல்லை. ஏன் என்றால், ஹெல்மெட் அணியவில்லை என்றால் பைக் ஸ்டார்ட் ஆகாது. இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டில் மைக்ரோ கன்ட்ரோலர் இருக்கும். அதேபோல், பைக்கிலும் ஒரு மைக்ரோ கன்ட்ரோலர். ஹெல்மெட்டை அணிந்ததும் உச்சந்தலை படும் இடத்தில் இருக்கும் பட்டன், பைக்கில் இருக்கும் மைக்ரோ கன்ட்ரோலருக்கு ‘ஹெல்மெட் அணிந்திருக்கிறார்’ என்று சிக்னல் கொடுக்கும்.  இதன் பிறகுதான் பைக் ஸ்டார்ட் ஆகும். இந்த புராஜெக்ட் இன்னும் பல விதங்களில் அப்கிரேட் செய்ய ஆராய்ச்சி நடக்கிறது. 

ரூட் மேப்

இன்றைக்கு, நாம் வேலைக்குச் செல்ல வேண்டிய கம்பெனி பஸ் நேரத்துக்கு வருவதில் பிரச்னை இருக்கிறது. காலையில் 8 மணிக்கு வர வேண்டிய பஸ், சாவகாசமாக 8.35-க்கு வரும். பள்ளி, கல்லூரி, கார்ப்பரேட் கம்பெனிகளின் பஸ்கள் எங்கே இருக்கிறது என்பது தெரிவது போன்ற ஓர் அப்ளிகேஷன் செய்தால்... அதுதான் ரூட் மேப் புராஜெக்ட். கம்பெனிகளோடு கல்லூரி, பள்ளி பஸ்களில் ஜிபிஎஸ் செட் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய வகையில் பயன்படுத்தலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick