மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

என் பட்ஜெட் 8 லட்சம். வேலை நிமித்தம் தினசரி 50 கி.மீ தூரம் வரை பயணிப்பேன். முதன்முதலாக கார் வாங்கப் போகிறேன் என்பதால், நல்ல மைலேஜும் குறைவான பாராமரிப்புச் செலவும் அவசியம். மேலும் டீசல் காரா அல்லது பெட்ரோல் காரா என்பதிலும் குழப்பமும் இருக்கிறது. அந்த கார், 4 பேருக்கான இடவசதியும் டிராஃபிக்கில் ஓட்டுவதற்கு வசதியான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியையும் கொண்டிருக்க வேண்டும்.

- சத்யசாய், இமெயில்.


முதன்முதலாக கார் வாங்குபவர்களுக்கு, பெட்ரோல் கார்தான் சிறந்த தேர்வு. தவிர, சராசரியாக மாதந்தோறும் 2,000 கி.மீ-க்கு மேல் பயணம் செய்வீர்கள் என்றால் மட்டுமே டீசல் கார் வாங்குவது லாபமாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் மாருதி ஸ்விஃப்ட் டிசையர், ஹூண்டாய் எக்ஸென்ட், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பயர் ஆகிய காம்பேக்ட் செடான்கள் கிடைக்கின்றன. இவற்றில் சிறந்த இடவசதியை அமேஸும், சிறந்த சிறப்பம்சங்களை எக்ஸென்ட்டும், குறைந்த பராமரிப்புச் செலவை ஸ்விஃப்ட் டிசையரும், பவர்ஃபுல் இன்ஜினை ஆஸ்பயரும் கொண்டிருக்கின்றன. அனைத்து கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து, உங்கள் தேவைகளை நிறைவேற்றும் காரைத் தேர்வு செய்யுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்