சிட்டி பட்ஜெட் கார்!

ரீடர்ஸ் ரெவ்யூ - டட்ஸன் ரெடி-கோ மு.முருகன் , படங்கள்: த.ஸ்ரீனிவாசன்

ன்  மகன்களுக்கு ஆட்டோமொபைல் துறையில் அதிக ஆர்வம். சின்ன வயதிலேயே கார் ஓட்டக் கற்றுக்கொண்டார்கள். தொடர்ந்து கார் தொடர்பான தகவல்களைச் சேமிப்பார்கள். அவர்கள்தான் எந்த கார் வாங்கலாம் என்பதை முடிவெடுப்பவர்கள். அப்படி, நாங்கள் வாங்கிய முதல் கார், மாருதி எஸ்டீம். பிறகு ரெனோ பல்ஸ்; இப்போது டட்ஸன் ரெடி-கோ வாங்கி இருக்கிறோம்.

ஏன் ரெடி-கோ?

நான் ஹோட்டல் தொழிலில் இருப்பதால், அடிக்கடி நகருக்குள் போய்வர வேண்டியிருக்கும். அந்தச் சமயங்களில் பைக் செட் ஆகாது. அதனால், ஒரு நல்ல என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். வீட்டில் ஏற்கெனவே ரெனோ பல்ஸ் இருக்கிறது. அந்த காரை வெளியூர்களுக்குச் செல்லும்போது மட்டும்தான் பயன்படுத்துவோம். நகருக்குள் ஓட்டுவது போன்ற மீடியம் லெவல் காருக்குத் தேவை இருந்தது. முதலில் ரெனோ க்விட் வாங்க நினைத்தோம். இரண்டு கார்களும் ஒரே பிராண்ட் என்பதால், வேறு பிராண்டில் கார் வாங்கலாம் என்று முடிவு செய்திருந்தபோதுதான், டட்ஸன் ரெடி-கோ அறிமுகம் ஆனது. காரைப் பற்றி விசாரித்துவிட்டு, ஷோரூம் சென்று டெஸ்ட் டிரைவ் செய்தோம். ரொம்பவே பிடித்திருந்தது. அப்போதே இந்த காரை வாங்க முடிவு செய்துவிட்டோம்.

ஷோரூம் அனுபவம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick