‘‘ரோடு கிங் மோஜோ!’’

ரீடர்ஸ் ரெவ்யூ - மஹிந்திரா மோஜோமு.முருகன், படங்கள்: த.ஸ்ரீனிவாசன்

னக்கு ஆட்டோமொபைலின் மீது ஆர்வம் அதிகம். ஒரு பைக்கைத் தேர்வு செய்வதற்கு முன்பு, அலசி ஆராய்ந்து, எல்லா விஷயங்களிலும் திருப்தி ஏற்பட்ட பிறகுதான் பைக்கை வாங்குவேன். நான் முதன்முதலில் வாங்கிய பைக் யமஹா RX-100. பின்பு, யமஹா FZ-16, ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு, கான்டினென்ட்டல் GT ஆகிய பைக்குகள் வைத்திருந்தேன்.

நான் அடிக்கடி நண்பர்களுடன் பைக்கில் டூர் செல்வது வழக்கம். எனவே, அதற்கேற்ற ஒரு பைக் வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் மஹிந்திரா, மோஜோ பைக்கை அறிமுகம் செய்தது.

ஷோரூம்  அனுபவம் 

கோவை, திருச்சி சாலையில் உள்ள ஜூம் மோட்டார்ஸில் மோஜோவை வாங்கினேன். ஷோரூம் அனுபவம் எனக்கு அவ்வளவு நிறைவாக இல்லை. மோஜோ அறிமுகம் ஆனதும் ஆவலுடன் ஷோரூம் சென்றேன். அவர்கள் முதலில் எனக்குச் சரியான தகவல்களைக் கொடுக்கவே இல்லை. டெஸ்ட் டிரைவுக்குக் கேட்டபோது, பைக்கில் எரிபொருள் இல்லை என்று மழுப்பினார்கள். பின்பு, ஷோரூம் மேலாளர் ஒருவர் வந்தபிறகுதான் கொஞ்சம் ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. நெடுஞ்சாலையில் 100 - 120 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்ய முடிந்தது. மோஜோவை ஓட்டும்போது சிறந்த கம்பர்ட் ஃபீல் கிடைத்தது. அதனால், மோஜோ பைக்கை புக் செய்தேன்.

இதுவரை இரண்டு முறை சர்வீஸ் செய்துள்ளேன். சர்வீஸ் செலவுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில்தான் இருக்கின்றன. ஸ்பேர் பார்ட்ஸ் குறைவான விலையிலேயே கிடைப்பது மகிழ்ச்சியாக  இருக்கிறது. சர்வீஸ் செய்த பிறகு எல்லா வேலைகளும் சரியாக முடிந்துள்ளதா என நாம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களாக எந்தத் தகவலையும் அப்டேட் செய்வது இல்லை.

மஹிந்திரா நிறுவனம், மோஜோ பைக்கில் ‘மோஜோ ட்ரைப்’ என்ற பெயரில் இமயமலைப் பயணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.ன்டெல்லியில் ஆரம்பித்து டெல்லியில் முடித்த அந்தப் பயணத்தில் நான் கலந்துகொண்டேன். மொத்தம் 16 நாட்களில் சுமார் 4,000 கி.மீ வரை பயணம் செய்த அந்த அனுபவம் மறக்க முடியாது.

பிடித்தது

நீண்ட தூரப் பயணங்களுக்கு மிக ஏற்ற பைக் மோஜோ. மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் அற்புதம். 5,000 ஆர்பிஎம் தாண்டும்போது, ஸ்மூத் ஃபீல் கிடைக்கிறது. 300 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் செயல்திறனும் அருமை. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் நன்றாக இருக்கிறது.முதல் கியர் வேகம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. ஹைவேயில் க்ரூஸ் செய்யும்போது மிக அருமையாக இருக்கிறது.  ஷார்ப்பான ரியர் பிரேக், சூப்பர் சேஸி என நல்ல பேக்கேஜாக இருக்கிறது மோஜோ. நீண்ட தூரம் பயணம் செய்தாலும் முதுகு வலி, கால் வலி வராத வகையில் பைக்கை பிரமாதமாக டிஸைன் செய்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick