கங்கையைக் கொண்டான்! | readers review - Motor Vikatan | மோட்டார் விகடன்

கங்கையைக் கொண்டான்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - மாருதி விட்டாரா பிரெஸ்ஸாதமிழ், படங்கள்: உ.கிரண்குமார்

சொன்னால் நம்பமாட்டீர்கள்! அறிமுகமான ஏழே மாதங்களில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் விற்பனை 50,000 தாண்டிவிட்டது. இதற்குக் காரணம், சிவக்குமார் போன்ற வெறித்தனமான மாருதி பிரியர்கள். ‘‘மாருதியைத் தாண்டி எந்த காரோட ஆக்ஸிலரேட்டர்லயும் நான் கால் வெச்சது இல்லை’’ என்று, ஜாலி டூரில் சீரியஸாக அவர் சொன்னபோதே மாருதியின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை புரிந்தது. கார் டெலிவரி ஆகி இரண்டு வாரங்கள்கூட ஆகவில்லை; 1,000 கி.மீ கூடத் தாண்டவில்லை; முதல் சர்வீஸ்கூட அனுப்பவில்லை. அதற்குள் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்புக்கு, தனது குடும்பத்துடன் தயாராக இருந்தார் சிவக்குமார்.

‘‘அங்கிள், டெம்பிள் நோ! பாரெஸ்ட் போலாம்’’ என்று சிவக்குமார்-திலகவதி தம்பதியின் ஏழு வயது மகள் சிவனிகாவிடம் இருந்து ஆர்டர் வந்தேவிட்டது. ‘‘ஃபாரஸ்ட்னா எலிப்பென்ட் இருக்கும். கடிச்சிரும்’’ என்று சிவனிகாவின் இரண்டு வயது தம்பியை பயமுறுத்தி, தஞ்சாவூருக்கு பிளான் போடப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick