ACCESSORIES

ஆக்சஸரீஸ் - கார்தமிழ்

ஹைட்ராலிக் கார் ஜாக்

கார் வாங்கும்போது ஸ்பேர் வீல், மேனுவல் புக், ஹஸார்டு சிக்னல் பிளேட், ஃபர்ஸ்ட் எய்டு கிட் போன்றவற்றோடு, ஜாக்கியும் மேண்டட்டரியாக வரும். ‘ஜாக்கை அப்படி ஓரமாப் போடு’ என்று சிலர் ஒதுக்குவதைக்கூடப் பார்த்திருக்கிறோம். ஆனால், பஞ்சர், டயர் பர்ஸ்ட் போன்ற சமயங்களில்தான் ஜாக்கின் அருமை நமக்குப் புரியும். பெரும்பாலான ஹேட்ச்பேக், செடான் கார்களுக்கு வழங்கப்படும் ஜாக்கிகள், கைகளால் நீளமான இரும்புக் கம்பிகொண்டு மேனுவலாகச் சுற்றும் வகையில் இருக்கும். மேடான இடங்களில் கைகளால் சுற்றுவதற்கு வாட்டமும் இருக்காது. அதற்காகவே வந்திருக்கிறது ஹைட்ராலிக் ஜாக். இதிலுள்ள துளையில் இதற்கெனக் கொடுக்கப்படும் கம்பியைச் சொருகி காலினாலோ, கையினாலோ அழுத்தினாலே போதும். இதில் ஏற்படும் பிரஷர் காரை உயரமாக லிஃப்ட் செய்கிறது. 2,000 கிலோ வரை இருக்கும் எஸ்யுவி-களைக்கூட ஈஸியாக இந்த ஜாக்கின் மூலம் உயரத்தை அதிகப்படுத்தலாம். இதில் டயர் மாற்றுவது மிக எளிது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்