கேட்ஜெட்ஸ் | Gadgets - Motor Vikatan | மோட்டார் விகடன்

கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம் - கேட்ஜெட்ஸ்கார்த்தி

கிங்ஸ்டன் ஹைப்பர்-எக்ஸ் கிளவுட் கோர் (Kingston HyperX Cloud Core)

மெமரி கார்டுக்கும், பென் டிரைவுக்கும் பெயர் பெற்ற கிங்ஸ்டன், ஹெட்போன் போன்ற பிற எலெக்ட்ரானிக் சாதனங்களையும் அவ்வப்போது வெளியிடும். ஹைப்பர்-எக்ஸ் கிளவுட் கோர் ஹெட்போன், கிங்ஸ்டன் வெளியீடுதான். 300 கிராம் எடையில், லைட் வெயிட் அலுமினியத்தில், அட்டகாசமான லுக்கில் இருக்கிறது. ஹெட்பேண்டில் இருக்கும் மெமரி ஃபோம், லெதர் டைப் இயர் குஷன் போன்றவை, பாடல்கள் கேட்க சௌகர்யமான ஃபீல் தரும். ஹெட்போனுடன் சிங்கிள் வொயர் எக்ஸ்டென்ஷன், டபுள் வொயர் எக்ஸ்டென்ஷன் என இரு மாடலிலும், வொயர்கள் பாக்ஸில் கொடுக்கப்பட்டு இருப்பது கூடுதல் ப்ளஸ். மைக், அகற்றிப் பொருத்திக்கொள்ளும் வகையில் இருப்பதால், தேவைக்கேற்ப அதைப் பயன்படுத்த முடியும். கேமிங் பிரியர்கள், இசை ஆர்வலர்கள் இருவருக்குமே இது ஓர் அட்டகாசமான குட் ஃபீல் தரும் வகையில், இதன் ஒலித்திறன் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதன் விலை `5,000 என இருந்தாலும், ஆன்லைன் தளங்களில் `3,500 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

ஏசர் ஆஸ்பையர் S13 (Acer Aspire S13)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick