ரெட்ரோ டூரர்!

ரோடு டெஸ்ட் | ட்ரையம்ப் T120தொகுப்பு: ராகுல் சிவகுரு

ரெட்ரோ டிஸைனில் ஒரு பைக் வேண்டும் என்பவர்களுக்கு, ட்ரையம்ப் நிறுவனத்தின் போனவில் சீரிஸ் பைக்குகள் கச்சிதமானவை. இப்போது முற்றிலும் புதிய போனவில் சீரிஸ் பைக்குகளைக் களமிறக்கியுள்ள ட்ரையம்ப், ஒவ்வொரு பைக்குக்கும் தனித்தன்மையான அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. போனவில் ரக பைக்குகளின் ஆரம்பப் புள்ளியான ஸ்ட்ரீட் ட்வின், முதன்முறையாக ரெட்ரோ பைக்குகளை ஓட்டுபவர்களுக்கு ஏற்ற சாய்ஸாகத் திகழ்வதுடன், அன்றாடப் பயன்பாட்டுக்கும் ஏற்றதாக இருக்கிறது. கஃபே ரேஸர் மாடல் பைக் வேண்டும் என்பவர்களை, த்ரக்ஸ்டன் R (Thruxton R) திருப்திபடுத்துகிறது. இது முன்பைவிட அழகாகவும், ஸ்போர்ட்டியாகவும் உருமாறியுள்ளது. ஆக, அடுத்த தலைமுறை T120 எந்த வகை ரைடர்களுக்கு ஏற்றதாக இருக்கும்?

டிஸைன் மற்றும் சிறப்பம்சங்கள்

ஸ்ட்ரீட்  ட்வின் பைக்கின் டிஸைன் சற்று மாடர்னாகத் தெரியும். ஆனால், T120-ல் 1960-களில் வெளிவந்த பைக்குகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பைக்கில் இருக்கும் வொயர் ஸ்போக் வீல்கள், பெரிய பெட்ரோல் டேங்க், கார்புரேட்டர் போலத் தோற்றமளிக்கக்கூடிய த்ராட்டில் பாடி, இரட்டை எக்ஸாஸ்ட் பைப்களின் டிஸைன் ஆகியவை இதனை உறுதிபடுத்துகின்றன. ஆனால், பைக்கை உற்று நோக்கும்போது, மாடர்ன் அம்சங்கள் புலப்படுகின்றன. இரட்டை டயல்களைக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில், ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், ஃப்யூல் கேஜ், மைலேஜ், Distance To Empty போன்ற தகவல்கள் டிஜிட்டல் ஸ்கிரீனில் இடம்பெற்றுள்ளன. பைக்கில் ட்வின் க்ரேடில் ஃப்ரேமின் டவுன் ட்யூப்களில் ரேடியேட்டர் அழகாகப் பொருத்தப்பட்டுள்ளது. ஸீட்டுக்குக் கீழே யுஎஸ்பி போர்ட் இருப்பது ப்ளஸ். T120-ல் இருக்கும் க்ரோம் பயன்பாடு, பெரிய பெட்ரோல் டேங்க், நீளமான தட்டையான இருக்கை, மெட்டல் கிராப் ரெயில், சென்டர் ஸ்டாண்டு ஆகியவை பைக்குக்கு கிளாஸிக் லுக் தருகின்றன. ஆக, ஃபுல் ஃபேரிங் ஸ்போர்ட்ஸ் பைக்குக்கு அப்படியே நேர் எதிர் திசையில் செல்கிறது இந்த பைக்கின் தோற்றம். எனவே, லெதர் ஜாக்கெட் போட்டுக்கொண்டு இந்த பைக்கில் கெத்தாகப் பயணிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick