பாதுகாப்பான பயணம்!

பாதுகாப்பு | டிரைவிங் டிப்ஸ்டாக்டர் சுந்தர ராமன்

காரை ஓட்டுபவர்கள் மட்டும் அல்லாமல், பயணிகளும் ஸீட் பெல்ட் அணிவது அவசியம். ஸீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தால், விபத்து நேரத்தில் என்னவாகும் என்பது யூடியூபில் குவிந்திருக்கும் வீடியோக்களைப் பார்த்தால் புரியும்.

* ஒரு சிலர் நீண்ட சுற்றுலா செல்ல மட்டுமே கார்களைப் பயன்படுத்துவர். அப்படிப்பட்டவர்கள், பயணம் கிளம்புவதற்கு முன்னர் பிரேக், ஆக்ஸிலரேட்டர், இன்ஜின், ஹேண்ட் பிரேக், கிளட்ச், டயர் ஆகியவற்றைச் சோதனை செய்து கொள்வது அவசியம்.

பயணத்தின்போது காரில் பாட்டை அலற விட்டுக்கொண்டு சென்றால், பின்னால் வரும் வாகனங்களின் ஹார்ன் சத்தம் காதில் விழாமல் போக வாய்ப்பு உண்டு. அதனால், மிதமான சத்தத்திலேயே பாட்டை ஒலிக்க விடவேண்டும்.

இரு சக்கர வாகனம் ஓட்டுபவருக்கு எப்படி ஹெல்மெட் முக்கியமோ, அதுபோல கார் ஓட்டுநர்களுக்கு ஏர் பேக் அவசியம். ஏர்பேக் உள்ள காரை வாங்குவது நல்லது.

செல்போன் பேசியபடியோ, இயர் போனைக் காதில் மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்டபடியோ கார் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

கட்டுப்படுத்தமுடியாத அளவு தூக்கம் வந்தால், காரை ஓரமாக நிறுத்தி, சிறிது நேர ஓய்வுக்குப் பின்பே பயணிக்க வேண்டும்.

ரோட்டின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, பின்னால் வாகனங்கள் வரவில்லை என்பதை உறுதிசெய்த பின்பே கதவைத் திறந்து இறங்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick