பஜாஜின் ஆட்டோ கார்... தடைகளைத் தாண்டுமா க்யூட்?

ஃபர்ஸ்ட் டிரைவ் | பஜாஜ் க்யூட்தொகுப்பு: தமிழ்

ஜாஜின் க்யூட்டைப் பார்த்தால், ‘இது சேர் இல்லை; சேர் மாதிரி’ என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது. ஆம், ‘இது கார் இல்லை; கார் மாதிரி!’ என்கிறார்கள் ஆட்டோமொபைல் வல்லுநர்கள். இதை ‘மைக்ரோ கார்’ என்றும் சொல்கிறார்கள்; ‘நான்கு சக்கரம் கொண்ட ஓர்ஆட்டோ’ என்றும் கமென்ட் செய்கிறார்கள். ஆனால், ஆட்டோமொபைல் அகராதிப்படி சொல்வது என்றால், இது ஒரு நான்கு சக்கர வாகனம். ஆங்கிலத்தில் ‘குவாட்ரி சைக்கிள்!’

குவாட்ரி சைக்கிள் என்றால் என்ன?

முதன்முதலில் குவாட்ரி சைக்கிளைத் தயாரித்தது ஃபோர்டு நிறுவனம்தான். 1890-களில் குதிரைவண்டிகளுக்குப் பதிலாகத் தயாரிக்கப்பட்டவைதான் குவாட்ரி சைக்கிள்கள். நான்கு சக்கரங்கள் கொண்ட ரிக் ஷா போலவே ஆரம்பத்தில் இருந்த குவாட்ரி சைக்கிள்கள், நாளடைவில் கார் போன்ற தோற்றத்தில் வர ஆரம்பித்தன. ஐரோப்பாவில், குறைவான தூரங்களுக்கு, நார்மலான வேகத்தில் செல்ல குவாட்ரி சைக்கிள்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். நான்கு மீட்டருக்குள் இருக்க வேண்டும்; 1,000 கிலோவுக்குள் இருக்க வேண்டும் என்று நம் நாட்டில் ஹேட்ச்பேக் கார்களுக்கு விதிகள் இருப்பதுபோல, குவாட்ரி சைக்கிள்களுக்கும் பல விதிகள் உள்ளன. மூன்று மீட்டருக்குள்தான் நீளம் இருக்க வேண்டும்; 450 கிலோ எடையைத் தாண்டக் கூடாது; 70 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது; 300 சிசிக்குள்தான் இருக்க வேண்டும் போன்ற பல விதிகளின் கீழ்தான் குவாட்ரி சைக்கிள் தயாரிக்க வேண்டும். அப்படித் தயாரிக்கப்பட்டதுதான் பஜாஜின் க்யூட்.

எப்படி வந்தது க்யூட்?

2012 ஆட்டோ எக்ஸ்போவில், பஜாஜ் நிறுவனத்தின் ஸ்டாலில் இருந்த அந்த காரை எல்லோரும் சுற்றிச் சுற்றி வந்தார்கள். பெயர்ப் பலகையில் ‘RE60’ என்ற எழுத்துக்களில் அப்போதே இது பரபரப்பைக் கிளப்பியது. ஏனென்றால், RE என்றால், ‘ரியர் இன்ஜின்,’ அதாவது பஜாஜின் ஆட்டோ ரிக் ஷாக்கள்தான் ‘RE’ என்று அழைக்கப்படுகின்றன. ‘அப்படியென்றால், இது ஆட்டோவா?’ என்று அங்கேயே கேள்வி கேட்டனர். ‘பஜாஜுக்கு எதுக்கு இந்த வேலை. பேசாமல் ஆட்டோவை மட்டும் தயாரிக்க வேண்டியதுதானே?’ என்று நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தன. ‘இதை கமர்ஷியலில் சேர்ப்பீர்களா... பிரைவேட் வாகனங்களில் சேர்ப்பீர்களா?’ என்று பஜாஜைக் கேள்விகளால் துளைத்தெடுத்தன மீடியாக்கள். ‘ஏற்கெனவே சாலை விபத்துகள் அதிகமாக இருக்கின்றன. வெறும் 450 கிலோ கொண்ட இந்த காரால் விபத்துகள், உயிர்ப் பலிகள் நிச்சயம்!’ என்று ஆன்லைனில் கட்டுரைகள் வந்தன. எல்லாவற்றையும் சவாலாகவே எடுத்துக்கொண்டது பஜாஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick