கோடியாக் வாங்குமா கோடி லைக்ஸ்?

ஃபர்ஸ்ட் டிரைவ் | ஸ்கோடா கோடியாக்தொகுப்பு: தமிழ்

கோடியாக் என்றால், உலகின் மிகப் பெரிய கொடுங்கரடி என்று அர்த்தம். ஸ்கோடாவைப் பொறுத்தவரை கோடியாக் எஸ்யுவிதான், கோடியாக் கரடி. 4.7 மீட்டர் நீளம், 3 வரிசை ஸீட்டுகள், 2.0 லிட்டர் இன்ஜினுடன் 190bhp பவர், 4X4 டிரைவிங் சிஸ்டம் என்று மிரட்டலாக வரவிருக்கிறது ஸ்கோடாவின் கோடியாக். யெட்டி போன்று காலை வாரிவிடாமல் இருக்க, கோடியாக் காருக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறது ஸ்கோடா. இந்த ஆண்டு இறுதிக்குள் நம் நாட்டுக்கு வரவிருக்கும் கோடியாக்கைப் பற்றி, ஒரு சுருக்கமான முன்னுரை.

ஸ்கோடாவின் சீஃப் டிஸைனர் ஜோஸப் கப்பான்தான் கோடியாக்குக்கு ஸ்கெட்ச் போட்டவர். ‘‘ஸ்டைலாகவும் இருக்க வேண்டும்; 7 சீட்டராகவும் இருக்க வேண்டும்; அதே சமயம் பாக்ஸ் டிஸைனில் இருக்கக் கூடாது!’’ என்று பெரிய லிஸ்ட் போட்டுக்கொண்டு அதன்படி இதை டிசைன் செய்தோம்!’’ என்கிறார் கெஃபான்.

ஆக்டேவியா, சூப்பர்ப் போன்ற கட்டுமஸ்தான கார்கள் தயாரிக்கப்படும் ஃபோக்ஸ்வாகனின் MQB பிளாட்ஃபார்மில்தான் கோடியாக்கும் தயாராகிறது. உறுதியான மல்ட்டி டைமென்ஷனல் கிரில், லோயர் ஏர்-இன்டேக்குகள் இந்த காரை மேலும் அகலமாகக் காட்டுகின்றன. காரின் நேர்த்தியான நேர்கோடுகள், ‘நான் செம ஸ்ட்ராங்’ என்று சொல்வதுபோல் இருக்கின்றன. முன் பக்கம் ட்வின் கிரிஸ்டல் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ஸ்கோடாவின் வேறு எந்த கார்களிலும் நீங்கள் பார்க்காதவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick