பவர் வார்... முன்னேறும் ஆடி RS-7

ஃபர்ஸ்ட் டிரைவ் | ஆ டி R S 7தொகுப்பு: தமிழ்

ந்தியாவில் ஹை பெர்ஃபாமென்ஸ் கார் என்றால், 500bhp பவர் இருக்க வேண்டும் என்பதுதான் ‘தம்ப் ரூல்’. இப்போது ‘அதுக்கும் மேல’ போய்விட்டது ஆடி. ஆம், ஆடியின் RS7 காரில் இருப்பது 605bhp பவர்.

ஏற்கெனவே விற்பனையில் இருந்து வந்தாலும், இந்தியாவின் ஹை பெர்ஃபாமென்ஸ் காராக வேண்டும் என்ற வெறியில் பெர்ஃபாமென்ஸில் அப்டேட்டாகி வந்திருக்கிறது இந்த RS7. பழைய காரில் இருந்த அதே 4 லிட்டர் ட்வின் டர்போ V8 பெட்ரோல் இன்ஜின், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், ஆடியின் ஃபேவரைட்டான குவாட்ரோ AWD போன்ற விஷயங்கள் அதேதான். ஆனால், பவர் 560-ல் இருந்து 605bhp-க்கு உயர்ந்திருக்கிறது. டார்க்கிலும் 71-ல் இருந்து 75kgm-க்குக் கூடியிருக்கிறது. இத்தனைக்கும், கடந்த ஜெனரேஷன் மாடல் RS6 காரைவிட (V10) இதில் 2 சிலிண்டர்கள் குறைவுதான்.

சரி, ஆடியின் இந்த திடீர் அதிரடிக்குக் காரணம்? இருக்கிறது. இந்தியாவில் இந்த  செக்மென்ட்டில் முதன்முதலில் 600bhp பவரை நெருங்கிய கார் என்றால், அது பிஎம்டபிள்யூவின் M5. இதற்குப் பிறகு வெளிவந்த பென்ஸின் AMG E63 காரும் அதே பெர்ஃபாமென்ஸ் செக்மென்டில் வர, அனைவரையும் ஆடிப் போகவைக்கும் வகையில் RS7 காரைக் களமிறக்கியுள்ளது ஆடி. மற்ற கார்களில் 80 கி.மீ வேகத்தில் செல்லும் ஃபீலிங், இதில் 200 கி.மீ வேகத்தில் சென்றாலும் தெரியவில்லை. சொல்லப் போனால், ‘0 - 100 கி.மீ வேகத்தை RS7 3.7 விநாடிகளில் கடக்கும்' என்று  பரிந்துரை செய்த ஆடியின் கூற்றே பொய்யாகிப் போனது.  நம் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்படி 3.5 விநாடிகளிலேயே 100 கி.மீ வேகத்தைத் தொட முடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick