பெட்ரோல் பெர்ஃபார்மர் எது?

ஒப்பீடு | பென்ஸ் GLC 300 VS டிஸ்கவரி ஸ்போர்ட் Si4 தொகுப்பு: ராகுல் சிவகுரு

ந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-10 கார்களின் பட்டியலைப் பார்க்கும்போது, பெட்ரோல் கார்கள் மீண்டு(ம்), சாலைகளை ஆக்ரமிக்கத் துவங்கியிருப்பது தெரியும். இது, லக்ஸூரி கார் செக்மென்ட்டிலும் தொடர்கிறது. பெட்ரோல் எஸ்யூவிகளுக்கான டிமாண்ட் அதிகரித்த நிலையில், லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் 2.0 Si4 மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் GLC 300 4Matic அதற்கான விடையாக வெளிவந்துள்ளன. ஜாகுவாரின் செடான்களில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை, டிஸ்கவரி ஸ்போர்ட்டில் பொருத்தியுள்ளது லேண்ட் ரோவர். அதேபோல, சமீபத்தில் களமிறங்கிய பென்ஸ் GLC மாடலில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டு பெட்ரோல் இன்ஜின்களிடையே, பல ஒற்றுமைகள் உள்ளன. 2,000 சிசி, 4 சிலிண்டர்கள், டைரக்ட் இன்ஜெக்‌ஷன் - டர்போ சார்ஜர் தொழில்நுட்பம், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 4 வீல் டிரைவ் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். டெக்னிக்கல் விவரங்களைப் பார்க்கும்போது, இந்த கனமான பெரிய எஸ்யூவிகளின் பெர்ஃபாமென்ஸ் நன்றாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. பெட்ரோல் இன்ஜின்களைக்கொண்டவை என்பதால், இதன் வாடிக்கையாளர்கள், ஸ்மூத்தான பெர்ஃபாமென்ஸ், சிறப்பான ஓட்டுதல் அனுபவம், ஸ்பெஷல் டிஸைன் ஆகியவற்றை எதிர்பார்ப்பார்கள். அதை இவை நிறைவேற்றுமா?

டிஸைன் மற்றும் கேபின்

இன்ஜின் - கியர்பாக்ஸ் விஷயத்தில் ஒற்றுமைகள் இருந்தாலும், இரண்டு எஸ்யூவிகளையும் அருகே வைத்துப் பார்க்கும்போது, இரண்டுமே வித்தியாசமாக இருக்கின்றன. லேண்ட் ரோவர் கார்களுக்கே உரித்தான டிஸைனைக்கொண்டிருக்கும் டிஸ்கவரி ஸ்போர்ட்டில், இவோக் காரின் தாக்கம் தெரிகிறது. முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இருக்கும் ஸ்கஃப் பிளேட்ஸ், குறைவான ஓவர்ஹேங், கறுப்பு நிற பில்லர்கள், நீட்டான பாடி லைன்கள், கச்சிதமான கிரில் என ஆஃப் ரோடர் எஸ்யூவிக்கான அம்சங்களைக்கொண்டிருக்கிறது டிஸ்கவரி ஸ்போர்ட்.

மெர்சிடீஸ் பென்ஸ் GLC 300, ஒரு மாடர்ன் பென்ஸ் கார் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது. பென்ஸ் லோகோவுடன்கூடிய பெரிய கிரில் மற்றும் 18 இன்ச் அலாய் வீல்கள், காருக்கு ஸ்போர்ட்டியான லுக்கைத் தருகிறது. GLC 300 காரின் கேபின், சி-க்ளாஸை நினைவுபடுத்துகிறது என்றாலும், இந்த செக்மென்ட்டிலே லக்ஸூரியான கேபின் இதுதான். COMAND ஸ்கிரீன் கேபினுடன் பொருந்தாதது போலத் தெரிந்தாலும், சென்டர் கன்ஸோலில் செய்யப்பட்டுள்ள மர வேலைப்பாடுகள், மெட்டல் பட்டன்களால் ஆன ஸ்விட்ச்கள், டேஷ்போர்டில் மெட்டல் வேலைப்பாடுகள், இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் போன்றவை க்ளாஸாக இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick