எக்ஸிக்யூட்டிவ் செக்மென்ட் - ஆட்டோமேட்டிக் அதிரடி சரவெடி எது?

ஒப்பீடு | ஹூண்டாய் எலான்ட்ரா - ஸ்கோடா ஆக்டேவியா - டொயோட்டா ஆல்டிஸ்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

டீசல் கார்கள் மீது மத்திய அரசு கெடுபடி காட்ட, இப்போது பெட்ரோல் கார்களுக்குத்தான் டிமாண்ட் அதிகம். அதுவும் ப்ரீமியம் செக்மென்ட்டில் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கார்களுக்கு இப்போது நல்ல வரவேற்பு. டொயோட்டா கரோலா ஆல்ட்டிஸ், ஸ்கோடா ஆக்டேவியா, ஹூண்டாய் எலான்ட்ரா ஆகிய கார்களில் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் கிடைக்கின்றன.

இதில், புதிதாகச் சேர்ந்தது ஹூண்டாய் எலான்ட்ராதான். புதிய எலான்ட்ரா பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மற்ற இரண்டு கார்களுக்கும் டஃப் ஃபைட் கொடுக்கிறதா?

இன்ஜின்

பெட்ரோல் இன்ஜின் என்றாலே, ஓட்டுதல் அனுபவத்துக்குதான் முக்கியத்துவம். கரோலாவின் 1.8 லிட்டர் இன்ஜின் 138bhp சக்தியை அளிக்கிறது. எலான்ட்ராவின் 2.0 லிட்டர் இன்ஜின் 152bhp சக்தியை அளிக்க, ஆக்டேவியாவின் 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 180bhp சக்தியை அளிக்கிறது. இதனால், இந்த மூன்று கார்களில் சந்தேகம் இல்லாமல் ஆக்டேவியாதான் ஃபாஸ்ட். 0 - 100 கி.மீ வேகத்தை 8.01 விநாடிகளில் எட்டுகிறது. எலான்ட்ராவுக்கு இதைவிட 2.2 விநாடிகள் கூடுதல் நேரம் ஆகிறது. கரோலா கூடுதலாக 4 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது.

எலான்ட்ராவின் நேர்த்தியான பவர் டெலிவரி, பாராட்டப்படவேண்டிய விஷயம். ஆனால், இந்த மூன்று கார்களில் எலான்ட்ரா பெட்ரோல் இன்ஜின்தான் அதிக சத்தமாக இருக்கிறது. மேலும், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் இயக்கம் சுமார்தான். லேசாக ஆக்ஸிலரேட்டரைத் தட்டிவிட்டாலும்கூட டவுன் ஷிஃப்ட் ஆகிறது. மூன்று டிரைவிங் ‘மோடு’களில் எக்கோ-தான் ஸ்மூத். பேடில் ஷிஃப்டர்கள் கிடையாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick