பிராக்டிக்கல் ஸ்பிஃப்ட்! | Used Maruti Suzuki Swift car buying tips - Motor Vikatan | மோட்டார் விகடன்

பிராக்டிக்கல் ஸ்பிஃப்ட்!

பழைய கார் | மாருதி ஸ்விஃப்ட் பெட்ரோல் ராகுல் சிவகுரு

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்... இந்தியர்களின் மனதைக் கவர்ந்த இந்த காருக்கு அறிமுகம் தேவையில்லை. மிட் சைஸ் ஹேட்ச்பேக் எனும் செக்மென்ட்டைத் துவக்கிவைத்த பெருமை இந்த காரையே சேரும். இதன் பெயரைப் போலவே, மாதாந்திர விற்பனையும் உச்சம்தான் (உலகளவில் ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டிவிட்டது. அதில், 54 சதவிகிதம் இந்தியாவில்). அருமையான பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள், சிறப்பான ஓட்டுதல் அனுபவம் ஆகியவை இந்த காரின் மிகப் பெரிய பலம். ஆனால், ஸ்விஃப்ட்டின் பின்பக்க இடவசதி மற்றும் பூட் ஸ்பேஸ், அதன் போட்டியாளர்களை விடக் குறைவுதான் என்றாலும், அது இந்த காரின் விற்பனையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அதேபோல, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை இதுவரை மாருதி சுஸூகி வழங்காதது ஆச்சரியம் அளிக்கிறது.

எந்த ஆண்டு மாடல் காரை வாங்கலாம்?

2005-ல் அறிமுகமான முதல் தலைமுறை ஸ்விஃப்ட்டைவிட, இரண்டாம் தலைமுறை காரின் நீளம், அகலம், வீல்பேஸ் ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்திருந்தது. மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் மாடல், 2011-ல் மாருதி சுஸூகி அறிமுகப்படுத்திய இரண்டாம் தலைமுறை ஸ்விஃப்ட்டின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 2011 தொடங்கி 2014 வரை விற்பனையில் இருந்த டாப் வேரியன்ட் ஸ்விஃப்ட் ZXi மாடலை, யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்குவது சரியான தேர்வாக இருக்கும். இதில் BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப ட்யூன் செய்யப்பட்ட 1.2 லிட்டர், 4 சிலிண்டர் K-சீரிஸ் VVT இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. இது நகரம் மற்றும் நெடுஞ்சாலைப் பயன்பாட்டுக்கு ஏற்ற பவரைக்கொண்டிருக்கிறது. ஸ்விஃப்ட்டின் ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷன் செட்-அப் காரணமாக, அதிக வேகத்தில் சென்றாலும்கூட காரின் நிலைத்தன்மை சூப்பராக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick