ரஜினி ரசிகையும் கறுப்பு ஃபிகோவும்!

கோவை to பானசுரா சாகர் அணைரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் | ஃபோர்டு ஃபிகோ டீசல்தமிழ் | படங்கள்: எம்.விஜயகுமார்

‘இன்னும் 30 கி.மீ இருக்கா? எப்போதான் போய்ச் சேர வேண்டிய இடம் வருமோ?’ என்று சலிப்படைவதற்கும், ‘என்னது... அதுக்குள்ள 250 கி.மீ க்ராஸ் பண்ணிட்டோமா?’ என்று வியப்படைவதற்கும் உள்ள வித்தியாசத்தில்தான் பயணத்தின் உற்சாகம் இருக்கிறது. இதில், இரண்டாவது வகையைத்தான் ‘ஃபன் டு டிரைவ்’ என்கிறார்கள். புதிய ஃபிகோ இரண்டாவது ரகம். இந்தியாவின் பவர்ஃபுல் டீசல் ஹேட்ச்பேக் என்று புதிய ஃபிகோவைச் சொல்லலாம். இந்த மாதம் ‘ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்’புக்காக, கோவையில் உள்ள வாசகர் ரஜினி பிரதாப்சிங்கின் ஃபிகோவில் ஏறி, பாலக்காடு வழியாக கேரள மாநிலம் வயநாட்டில் இறங்கியபோது, ‘‘இவ்வளவு சீக்கிரம் வருவோம்னு நினைக்கவே இல்லை!’’ என்று வியந்தார், ரஜினி பிரதாப் சிங்கின் மனைவி ரீனா.

கோவையில் ஓர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகவும், வேறு ஒரு பள்ளியில் அக்கவுன்ட்ஸ் பிரிவிலும் பணிபுரியும் ரஜினியும் ரீனாவும் கலப்பு மணம் புரிந்தவர்கள். ‘‘யார் எங்களைப் பார்த்தாலும் லவ் மேரேஜானுதான் கேட்கிறாங்க. காரணம், என் மனைவி!’’ என்று சொன்ன ரஜினி பிரதாப்சிங்கின் மனைவி ரீனா, ஓர் ஆங்கிலோ இந்தியப் பெண்மணி. அஸ்ஸாமில் பிறந்தாலும், கவிஞர்களே நாணும் அளவுக்கு இலக்கண சுத்தமாகத் தமிழ் பேசுகிறார். மோட்டார் விகடனின் அதி தீவிர வாசகி என்று சொல்கிறார். ‘‘நீங்க மொபிலியோவில் கல்பேட்டா போயிட்டு வந்தீங்கல்ல. ஞாபகம் இருக்கு!’’ என்று நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். ‘‘என் கணவர், ஆசிரியர் மட்டுமில்லை; வெண்பா கவிஞரும்கூட! ஆனந்த விகடனின் ‘சொல்வனம்’ ரசிகர் அவர். நான் அவரது கவிதைகளுக்கு ரசிகை!’’ என்று கணவர் பற்றி வெட்கப்படுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick