தீபாவளி சீஸன்! - என்னென்ன மாற்றங்கள்?

தீபாவளி ரிலீஸ் | பைக்ஸ்தமிழ்

பேஸன் ப்ரோவில் ஃபேஷன் தொழில்நுட்பம்!

இந்த தீபாவளிக்குப் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது ஹீரோவின் அச்சீவர் பைக். ஏற்கெனவே 2012-ல் 150 சிசியில் வெளிவந்த அச்சீவர், விற்பனையில் பெரிதாக அச்சீவ் செய்யவில்லை. இப்போது அதே சிங்கிள் சிலிண்டர் 150சிசி இன்ஜினுடன் வரவிருக்கிறது புதிய அச்சீவர். இது தவிர, எக்ஸ்ட்ரீம் 200 சிசி பைக்கையும் களமிறக்க இருக்கிறது ஹீரோ. விற்பனையில் இருக்கும் பைக்குகளில் மாற்றம் என்று பார்த்தால், ஸ்ப்ளெண்டர் மற்றும் பேஸன் ப்ரோ பைக்குகள் செம ஸ்டைலிஷ் தோற்றத்துக்கு மாறியிருக்கின்றன. எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் என்னவென்றால், ஸ்ப்ளெண்டர் 100, 110 சிசி பைக்குகளில் இருந்த ஐ-ஸ்மார்ட் தொழில்நுட்பம், இப்போது பேஸன் ப்ரோ பைக்குக்கும் தாவ இருக்கிறது. ஹீரோவின் ஃபேவரிட்டான ஐ-ஸ்மார்ட் பற்றித் தெரியும்தானே! சிக்னலில் 5 விநாடிகள் பைக் ஐடிலிங்கில் நின்றால், ஆஃப் ஆகிவிடும். கிளட்ச்சைப் பிடித்தவுடன் இன்ஜின் தானாகவே ஆன் ஆகி, விடு ஜூட் எனப் பறக்கலாம். கலர்ஃபுல் பேஸன், ஸ்டைல் ஃபேஷன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick